நேற்றே எழுத வேண்டிய பதிவு. மிகவும் அசதியாக இருந்ததால் இன்று தான் எழுத முடிந்தது.
25.02.2011 டாடா காண்பித்து விட்டு ஆபீசில் இருந்து 1.15 மணிக்கு புறப்பட்டாலும் வீட்டில் இருந்து புறப்பட 2.45 மணி ஆகிவிட்டது. மனதில் ஒரு சின்ன தடுமாற்றம் ஏற்பட்டதை என்னால் மறுக்க முடியாது. அம்மாவிடம் சொல்லவில்லை சென்னை போறதைப் பற்றி அதுவும் பைக்கில்....அப்புறம் என் கல்லூரி நண்பன் என்னை நம்பி வருகிறான். இருவரும் புறப்பட்டோம். பைக்கில் நெடுதூரப் பயணம் இதுவரை சென்றதில்லை. ஒரே வேகத்தில் 100 கி மீ ஓட்டினேன். வண்டியை நிறுத்தி ஒரு ஐந்து நிமிடங்கள் ஓய்வெடுத்தோம். அப்புறம் நானும் ஷங்கரும் மாறி மாறி வண்டி ஒட்டி 8.15 மணிக்கு சென்னையை அடைந்தோம். ஷங்கரை இன்னொரு கல்லூரி நண்பன் விக்னேஷ் வந்து அழைத்துச் செல்ல நான் நேராக சென்னையில் பணி புரிந்த என் பழைய ஆபீஸ் சென்றேன் மத்திய கைலாசில் இருந்து சோழிங்கநல்லூருக்கு. அங்கே சில நண்பர்களை சந்திக்க முடிந்தது. அவர்களுடன் சிறிது நேரம் மொக்கை போட்டு விட்டு விடை பெற்றேன் என் அலுவலக நண்பர்களுடன். வேளச்சேரி கிண்டி வழியாக அடையார் வந்து சேர்ந்தேன். என் கல்லூரி நண்பர்கள் பெசன்ட் நகர் பீச்சில் இருக்க அவர்களுடன் சேர்ந்து கொண்டேன் இரவு 11 மணிக்கு. அருண் ஐஸ் கிரீம், ப்ரூட் ஷாப் சென்றோம். அடையாரில் விக்னேஷ் வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 12.30.
26.02.2011 காலை எழும் போது மணி 10.30. கல்லூரி நண்பர்களுடன் மதியம் பைக்கில் மகாபலிபுரம் போவதாய் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது(மறுபடியும் பைக்கா!!!!). அந்த ட்ரிப் கிளம்புவதற்கு முன்பாக சைதையில் இருக்கும் நண்பரை(கார்த்திக்) சந்திக்கச் சென்றேன். மதிய உணவை அடையார் வசந்த பவனில் முடித்தேன் என் கல்லூரி நண்பர்களுடன். வேறு ஒரு நண்பரும் எங்களுடன் சேர்ந்து கொள்வதாக இருந்தது. அவரை அழைக்க விக்னேஷ் சென்று விட நான் கிண்டி சென்று என் அலுவலகத் தோழியை சந்தித்தேன். அந்த நண்பரை அழைத்துக் கொண்டு விக்னேஷ் வந்து விட நான், ஷங்கர், விக்னேஷ் மற்றும் அந்த நண்பர் ஆகிய நால்வரும் இரண்டு பைக்கில் புறப்பட்டோம். ECR ரோட்டில் செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு, ஆசை என்று கூட சொல்லலாம்(இப்படி எல்லாம் கூட ஒரு கனவா, ஆசையா!!!!). போகும் வழியில் பீச் ஒன்று தெரிய வண்டியை நிறுத்தினோம். கடலில் ஒரு 30 நிமிடங்கள் ஆட்டம் போட்டு விட்டு மாமல்லபுரம் பயணத்தை தொடர்ந்தோம். 5.45 க்கு சென்றடைந்தோம். 6 மணி வரை தான் பூங்காவிற்குள் செல்ல அனுமதி என்பதால் டிக்கெட் தரவில்லை. நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம். மற்ற மூவரும் துப்பாக்கி சுடுதலில் பிஸியாக இருக்க நான் என்னவெல்லாம் சாப்பிடலாம் என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன். மாங்காய், மிளகாய் பஜ்ஜி, பொறி, தர்பூசணி என்று அங்கே கிடைத்த எல்லாவற்றையும் சாப்பிட்டோம். 7 மணிக்கு புறப்பட்டோம். 8 மணி அடையார் வந்து சேரும் பொழுது. அதன் பின் மேலும் ஒரு அலுவலகத் தோழியை சந்திக்கச் சென்றேன். என் கல்லூரி நண்பர்கள் மற்றும் அலுவலக நண்பருடன் மந்தைவெளி வழியாக சத்யம் சென்றேன். சத்யம் ஸ்க்ரீனில் நான் பார்த்த முதல் திரைப்படம் - பயணம். நைட் ஷோவிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது எனக்கு மட்டும் ஆச்சர்யமாக இருந்தது. படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தேன். குறிப்பாக shining star சீன்ஸ். அண்ணா சாலை வழியாக இரவு வீடு வந்து சேர்ந்தோம். சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு அனைவரும் உறங்கினோம்.
27.02.2011 காலை 7 மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்து 8 மணிக்கு எழுந்தேன். 10.30 மணிக்கு என் பழைய அலுவலகத்தில் கிடைத்த நண்பர்களைச் சந்தித்தேன். அவர்களுடன் சேர்ந்து அபிராமி மால் சென்றேன். அபிராமி செல்வதும் இது தான் முதல் முறை. ஸ்ரீ அன்னையில் காவலன் பார்த்தோம். அதன் பின் Ampa Skywalk சென்றோம். எப்பொழுது அலுவலக நண்பர்களைச் சந்தித்தாலும் KFC கண்டிப்பாகச் செல்லுவோம். இந்த முறையும் தப்பவில்லை. ஆனால், வெறும் பாப்கார்ன் சிக்கன் மட்டுமே சாப்பிட முடிந்தது சில நண்பர்கள் சுத்த சைவம் என்பதால். இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை பெரிய திரையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போட்டியைக் காண அவ்வளவு கூட்டம் இருந்தது. மூன்றாவது மாடியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தோம். சச்சின் சதம் அடித்ததும் கீழே வந்துவிட்டோம். இந்தியா பேட்டிங் முழுவதையும் மிக்க ஆரவாரம் செய்து கொண்டு பார்த்தோம். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதன் பிறகு அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டோம். அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு நான் அடையாறுக்கு புறப்பட்டேன். சென்னையை விட்டு நாளை பெங்களூருக்கு கிளம்ப வேண்டும் என்று நினைத்துப் பார்த்தேன். என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கின. என் கல்லூரி நண்பர்கள் கண்டுபிடித்துவிட்டனர் என் முகம் வாடிப் போய் இருப்பதை. இரவு உணவு அடையாரில் முடித்தோம். கிரிக்கெட்டில் இந்தியா தோற்று விடும் நிலைமையில் இருந்தது. மொபைலில் ஸ்கோர் பார்த்துக் கொண்டே இருந்தோம். திடீரென்று பார்த்தால் இந்தியா ஜெயித்து விடும் போல தோன்றவே வீட்டிற்கு விரைந்தோம். நாங்கள் மேட்ச் பார்க்க ஆரம்பித்த நேரமோ என்னவோ இந்தியா சொதப்பியது. ஆட்டம் டை யில் முடிந்தது இந்த சென்னை ட்ரிப்பிறகு மேலும் ஒரு சிறப்பைத் தந்தது.
சில நண்பர்களை நேரமின்மையால் சந்திக்க முடியாமல் போனது மிக வருத்தமாக இருந்தது.
28.02.2011 காலை 5.25 மணிக்கு புறப்பட்டோம். ஓசூர் வரும் வரை எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அதன் பிறகு தான் ஐயோ என்று இருந்தது. சென்னையை மிகவும் மிஸ் செய்கிறேன். சென்னையில் எனக்கு பிடித்த இடங்களை, என் நண்பர்களை. பெங்களூர் வந்து சேரும் போது மணி 10.15. இன்றைய தினம் முழுவதும் ஏதோ ஒரு கடுப்பு என்னுடன் இருந்து கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் சொல்லி விட்டேனா???? இல்லை.... இந்த இரண்டு நாட்களும் சென்னையில் சுற்றாத இடங்கள் இல்லை. அதுவும் என் பைக்கில். ஏதோ ஒரு சந்தோசமும் ஒரு இனம் புரியாத வலியும் இருந்து கொண்டே இருந்தது. எப்பொழுதும் இந்த வலி இருக்கத் தானே போகிறது. பைக் ஓட்டும் போதெல்லாம் அவள் என்னுடன் இல்லை என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் இருந்தது. 27 ஆம் தேதி சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த வடபழனிக்கு சென்றேன். காலை 9 மணியில் இருந்து 10.15 மணி வரை அங்கே சுற்றி கொண்டே இருந்தேன் தனிமையில். இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருக்க வேண்டும் போல இருந்தது. எங்கே செல்கிறேன் என்று தெரியவில்லை அவள் நினைவுகள் என்னை அழைத்துச் சென்ற இடங்களுக்கு எல்லாம் சென்று கொண்டிருந்தேன். கத்தி அழ வேண்டும் போல இருந்தது. வடபழனியை விட்டுக் கிளம்பவே மனசில்லை.
இந்தப் பயணம் முழுமையாக இருந்ததா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லுவேன். நான் எப்பொழுது சென்னை சென்றாலும் அது முழுமை அடையப் போவதில்லை. அவள் இல்லாத எந்தப் பயணமும் முழுமை பெறப் போவதில்லை என் வாழ்க்கைப் பயணத்தைப் போலவே.
கவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )
-
இறுக்கத்தின் விளை நிலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டி தீர்த்திருக்கிற அருவியின்
"கவனிக்க மறந்த சொற்களை" தான் இவ்வளவு சாதாரணமாக ஒரு தொகுப்பாக்கி
இருக்கிறார்...
"காவடி பாக்க போவோம்."- தைப்பூசமும் பரோட்டாவும்
-
Farrer park ரயில் நிலையம் அருகே இருக்கும் பெருமாள் கோயிலிருந்து Tank Road
முருகன் கோயில் வரை தைப்பூசம் ஊர்வலம் போகும் சிங்கப்பூரில். விமர்சையாக
நடைபெறும் ப...
💗திரும்புதல் அல்லது நினைவுகளை புதுப்பித்தல்.💗
-
*உயர்தரத்து பரீட்சைக்கு *
*ஒரு தவம் போல படித்துக்கொண்டிருப்பாய் - நீ*
*மேசையில் உறங்கிப்போகும் உன்னை தவம் போல பார்த்துக்கொண்டிருப்பேன் - நான்*.
நாடு முழுவ...
கவிதைகளல்லாதவை - 1.1
-
என்னை கவிஞனென
நிரூபிக்க பட்டாம்பூச்சிகளையும்
சில இறகுகளையும்
சேகரித்து வந்தால் போதுமென்று நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்
நானோ
அது எதுவமறியாமல...
கடலோரக் கவிதைகள்
-
பிரியத்தின் பேரழகி !
இன்று கோவளம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக்
கடற்கரையில் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நி...
வழக்கம் போல்.
-
என் இரவுகளுக்கும்
உன் நினைவுகளுக்கும்
தூக்கமே இல்லை..
நடு இரவின் ஒத்திகைகளை
சேமித்த வசனங்களை
என்னால் ஒப்புவிக்க
முடியவில்லை..,
மௌனமாய் சிர...
விதியின் வினை
-
நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்உன்
நினைவு என் உள்ளத்தில் அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..அதை எப்படி
அழிப்பது,... என...