Tuesday, August 17, 2010
காதல் புரியும் தருணம்
இருக்கும் வரை
புரிந்து கொள்ளாத
உன் காதலை
உணர்கிறேன்,
முதல்முறை கனவிலும்
கதறி அழும் பொழுது...
Monday, July 19, 2010
காதலின்றி...
நோட்புக்கில் ப்ரௌஸ் பண்ண ஆரம்பித்தேன். தினமும் பார்ப்பது தானே என்ன புதிதாய் இருந்து விடப் போகிறது? shut down பண்ணப் போகிற நேரத்தில் எங்கள் department இன் Mr.Perfect ஐ ஆன்லைனில் பார்த்தேன். சரி இவனோட பேசுவது மட்டும் தான் நான் காதலில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்று முடிவு செய்தேன். அவன் பெற்றோர் வைத்த பெயர் சரவணன். ஆனால், எங்கள் காலேஜுக்கு Mr.Perfect என்று தான் அவனை தெரியும். எதற்கு Mr.Perfect என்று நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பேரிலேயே புரிந்திருக்கும். படிக்கிற வயசுல இருக்க வேண்டிய எல்லா நல்ல பழக்கமும் அவன்கிட்ட மட்டும் தான் பார்க்க முடியும். எல்லா professors க்கும் பிடித்த ஒரே மாணவன். "Mechanical Engineering" தான் அவனுக்கு உலகமே. காதலை பற்றிய படங்களை கூட பார்க்க மாட்டான்(காதல் படங்கள் பார்ப்பவர்கள் Mr.Perfect ஆக இருக்க முடியாது என்று நான் சொல்லவில்லை). இப்படிப்பட்ட Mr.Perfect ஐ கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் கடந்து தான் வந்திருப்போம்.
இன்றைக்கு நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று அவனுடன் chat பண்ண ஆரம்பித்தேன்.
'Hello Mr.Perfect' என்று ping பண்ணினேன்.
"Hello cheater" என்று பதில் வந்தது.
'cheater ah!! cheater ah!! cheater ah!!' அதிர்ந்தேன். 'எதுக்குடா என்ன cheater ன்னு சொல்ற?'
"அப்புறம் என்ன Mechanical Engineerning படிச்சிட்டு இப்ப software ல குப்பை கொட்டுறல்ல? அதான் அப்படி சொன்னேன். நீ பண்ணது Mechanical Engineering க்கு துரோகம் தான?"
அவன் இன்னும் மாறவே இல்லை. Mechanical Engineering ஐ Mech என்று சொல்வது கூட அவனுக்கு பிடிக்காது. 'அப்படி எல்லாம் இல்ல சரவணன். Mechanical Engineers ம் software field ல ஜெயிக்க முடியும்னு நிரூபிக்க தான் நான் இந்த field ல இருக்கேன்' என்று சமாளித்தேன்.
"இந்த வாய் மட்டும் இல்லன்னா ஒரு பைசாவுக்கு கூட நீ தேரமாட்ட டா"
அட! என்ன இவனும் நம்மள கலாய்க்க ஆரம்பிச்சுட்டான் இவனையும் இந்த உலகம் கெடுத்திடுச்சா? மனதுக்குள் மிகச் சின்ன சந்தேகம் வந்தது. ரொம்ப damage ஆக வேண்டாம் என்று 'வொர்க் எப்படி போகுது சரவணன்?' என்று மட்டும் கேட்டேன்.
"ரொம்ப டைட்டா இருக்கு டா. CFD analysis பண்ணி ரிப்போர்ட் அனுப்புறது என்னோட வேலை. CFD analysis ஞாபகம் இருக்கா?"
CFD analysis பற்றிய theory தெரியவில்லை என்றாலும் அந்த 'CFD analysis' ஐ என்னால் எப்படி மறக்க முடியும்? இருந்தாலும் 'CFD analysis பத்தி கேள்விப்பட்டதே இல்லை டா. மறந்துட்டேன்னு நினைக்கிறேன்' என்றேன்.
"என்னது மறந்துட்டியா? கிளாஸ் கவனிச்சா தானடா ஞாபகத்துல இருக்கும். நீ தான் அன்னைக்கு உறங்கி நம்ம HOD கிட்ட மாட்டினியே. அவரு கூட உன்னை கழுத்தை பிடிச்சு தள்ளி விட்டாரே வெளிய. அதை கூட மறந்துட்டியா? தேதி கூட... hmm got it. ஆகஸ்ட் ஆறு டா"
அடப்பாவிங்களா நாம மறக்க நினைச்சாலும் இவனுங்க தேதியோட ஞாபகம் வச்சு இருப்பாங்க போலையே என்று நொந்து கொண்டேன். 'ஹ்ம்ம் ஹ்ம்ம்' என்று மட்டும் அனுப்பினேன்.
"அன்னைக்கு மட்டுமா? அதுக்கு அடுத்த வாரம் கூட நம்ம மேனகா மேடம் கிளாஸ்லயும்.."
அவன் முடிப்பதற்குள் குறுக்கிட்டேன். 'போதும்டா சாமி. ஏதோ முடிவோட தான் இருக்க போல' என்றேன்.
"cool man. சும்மா தான் கலாய்ச்சேன்"
'நீ ரொம்ப மாறிட்ட சரவணன்'
"ஹ்ம்ம் எஸ். எல்லாம் அவளால தான்"
'அவளா!!! யாரு உங்க அக்கா பொண்ணா?? அந்த நாலு வயசு வாலு தான?'
"இல்லை டா. இவா... இவளை பத்தி நிறைய சொல்லலாம்"
'டேய் நீ இன்னும் பேரைக் கூட சொல்லலைடா'
"சொல்றேன் டா. நம்ம வாண்டுக்கும், வாசனுக்கும் மட்டும் தான் இதை சொல்லி இருக்கேன் டா. நீ யார்கிட்டயும் இப்ப சொல்ல வேணாம் டா. நானே சொல்லிக்கிறேன். சரியா?"
'will keep it personal saravanan. நீ சொல்லு'
"சுருக்கமா சொல்றேன். அவ பேரு மோகனா டா. My school mate from class 6th to 12th. கிளாஸ்ல எப்பவும் 2nd topper. ரொம்ப brilliant ஆன பொண்ணு. அழகும் அறிவும் ஒரே இடத்துல இருக்காதுன்னு சொல்றதை பொய்யாக்க இந்த உலகத்துல பிறந்தவடா. அவளுக்குன்னு ஒரு திமிர் இருக்கும். அந்த திமிர், அலட்டலான பேச்சு தான் எனக்கு அவகிட்ட பிடிச்சதே. டிரெஸ்ஸிங்ல அவளுக்குன்னு ஒரு தனி ஸ்டைல் இருக்கு. அவளை அடிச்சுக்க முடியாதுடா. நல்ல வாயாடி. அப்பா அம்மான்னா அவளுக்கு உயிர்டா. எங்க அம்மா அப்பாவை கூட அவ பேச்சால மயக்கி வச்சிருக்கா என்றால் பாரேன்.."
'ஹ்ம்ம்..என்ன நடந்துச்சுன்னு சொல்லு சரவணன்'
"12th exams முடிஞ்ச அன்னைக்கு என்னை லவ் பண்றதா சொன்னாள். இந்த வயசுல வர்றது லவ் இல்லை just infatuation தான்னு சொன்னேன். அதுக்கு என்னால இன்னும் வெயிட் பண்ணி சொல்ல முடியும். இது நாள் வரை நீ என் கண்காணிப்புல இருந்த. அதனால தைரியமா இருந்தேன் எவளும் உன்னை நெருங்க முடியாதுன்னு. நீ Mechanical Engineering சேரப் போற. நீயும் நானும் வேற வேற fieldல ஜெயிக்கணும். அதனால தான் நான் fashion designer படிக்கப் போறேன். ரொம்ப பயமா இருக்கு வேற யாராவது உன்னை என்கிட்ட இருந்து பறிச்சிடுவாங்களோன்னு. அதான் இப்பவே சொல்றேன். உனக்கு வேற யாராச்சும் propose பண்ணாலும் என் ஞாபகம் தான் வரணும். I will wait for you என்று சொன்னாள். Don't waste your time ன்னு நான் சொல்லிட்டேன். நாங்க பிரிஞ்சோம்"
'...'
"நான் அவளை மறந்தே போய் இருந்தேன். இரண்டு மாசத்துக்கு முன்னால என்னோட ஸ்கூல் பிரெண்ட் கார்த்திக் என்னை மீட் பண்ண வந்திருந்தான் என் ஆபீஸ்க்கு. எப்படி டா உனக்கு என்னோட contact details கிடைச்சதுன்னு கேட்டதுக்கு மோகனா தந்தான்னு சொன்னான். மோகனா இன்னும் என்னை மட்டும் தான் நினைச்சிட்டு இருக்கான்னு சொன்னான். ஸ்கூல்ல எப்பவும் நான் தான் topper ஆக இருக்கணும்னு அவா எப்பவும் வேணும்னே சில questions தப்பா answer பண்ணுவாளாம். மோகனா என்னை லவ் பண்றது எங்க அக்காவுக்கு தெரியுமாம். அவங்க கூப்பிட்டு மிரட்டி இருக்காங்க நாங்க வேற சாதி என்பதால. அவா அவங்க அம்மாகிட்ட போய் அழுது இருக்கா, எப்படி மா நான் அந்த வீட்ல போய் இருக்கப் போறேன். அவன் அக்காவை பார்த்தலே நடுக்கம் வருதும்மா. சரவணனும் என்னை புரிஞ்சிக்கிற மாதிரி தெரியலை. நீங்க பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று. அதுக்கு அவங்க அம்மா என்னடி லூசு மாதிரி பேசுற மனசுல ஒரு பையனை வச்சுட்டு எப்படி இன்னொருத்தர் கூட உன்னால வாழ முடியும். நீ தான் உன் லவ், வாழ்க்கைக்காக போராடனும். நீ ஆசைப்பட்ட வாழ்க்கை வேணும்னா சும்மா கிடைச்சிடுமா? என்ன ஆனாலும் சரி அந்த பையன் கூட தான் உன் வாழ்க்கை இருக்கணும்னு சொல்லி இருக்காங்க. இதை எல்லாம் என்கிட்ட சொல்ல கூடாது என்றும், எப்படியாவது என்னை துரத்தி துரத்தி லவ் பண்ண வைக்கிற ப்ளான்ல மோகனா இருக்கா என்று கார்த்திக் சொன்னான்."
'அப்புறம் என்னடா ஆச்சு. திரும்பவும் அவா தான் propose பண்ணாளா?'
இரண்டு நிமிஷம் டா. அவா கால் பண்றா பேசிட்டு வந்திடுறேன் என்று சொல்லிப் போனவன் பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்து தொடர்ந்தான்.
"இல்லை டா. என் மேல பைத்தியமா இருக்கிற என் மோகனாவை விட்டுட்டு நான் எதுக்கு வேற யாரு கூடவோ வாழனும்னு நான் 'Can you share your life with me' ன்னு சொல்லி அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தந்தேன் டா. அவா கண்ணுல அப்படி ஒரு சந்தோஷம் டா அன்னைக்கு"
'Awesome. நம்பவே முடியலை சரவணன். நீ...'
"இப்படி நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது தான் லைப் டா. அவா என் லைப் ல வந்த பிறகு ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்கிறேன். வாழ்க்கையை புரிஞ்சுகிட்டேன். நான் ரசிக்கிறேன் டா என்னோட வாழ்க்கையை அவா கண்களால"
'great da. எப்ப கல்யாணம்? உங்க அக்கா ஒத்துக்கிட்டாங்களா?'
"வீட்ல சொன்னேன் அவா இல்லாம என்னால வாழ முடியாதுன்னு. வேற சாதின்னு பிரச்சனை வந்துச்சு. காதலிச்சா எங்க இருந்து தைரியம் வரும்னு தெரியலை டா. பிரிட்டிஷ் கிட்ட போராடி நம்ம தலைவர்கள் சுதந்திரமே வாங்கிட்டாங்க. நம்ம வீடு டா. அவங்கள்ட்ட போராடி சம்மதிக்க வைக்கிறது பெரிய விசயமா என்ன?"
சிரித்தேன்.
"கல்யாண தேதி முடிவானதும் நம்ம பிரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் சொல்லலாம்னு இருக்கேன் டா. ஆனால், என்னால சொல்லாம இருக்க முடியலை. அதான் என்னோட நெருங்கிய பிரெண்ட்ஸ் கிட்ட உளறிடுறேன்"
'congrats டா. wish u a happy married life in advance. தங்கச்சி மோகனா கிட்டயும் சொல்லிடு"
போன் வந்தது. என்னடா chat பண்ணிட்டு இருக்கிறவன் கால் பண்றான்னு நினைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தேன். எதிர்முனையில் பயங்கர சிரிப்பொலி. சிரித்துக் கொண்டே பேச ஆரம்பித்தான். "நான் சொன்னதை எல்லாம் நம்பிட்டியாடா?" என்றான். 'என்னடா சொல்ற' என்றேன். "நாம காலேஜ் படிக்கும் போது ஏதாச்சும் படம் பார்த்துட்டு வந்து அந்த கதையை உல்டா பண்ணி என்கிட்ட எவ்வளோ படம் ஒட்டி இருப்ப. அதான் இந்த டைம் நான் சும்மா ட்ரை பண்ணிப் பார்த்தேன். போன்ல சொன்னா நானே சிரிச்சு காட்டிக் கொடுத்திடுவேன்னு தான் chat பண்ணேன். கண்டிப்பா நீ நம்ப மாட்டன்னு தான் நினைச்சேன். ஆனால், நீ எல்லாத்தையும் நம்பிட்ட. என்கிட்ட ஏமாந்த முதல் ஆள் நீ தான்டா. இதை வாண்டுக்கும், வாசனுக்கும் முதல்ல சொல்லணும்" என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான். நானோ வாயடைத்துப் போய் இருந்தேன். "என்ன டா எதுவும் பேச மாட்டேங்கிற? ஏமாந்த சோகத்துல இருக்கியா... ஐயோ டைம் ஆச்சு டா. நான் போய் வேலை பார்க்கிறேன். ரிப்போர்ட் முடிக்கலை இன்னும். நைட் கால் பண்றேன் டா. bye" என்றான். 'bye' என்று முடித்தேன்.
'என்னக் கொடுமை சரவணன் இது' என்று என் தலையில் அடித்துக் கொண்டேன். என்னைய ஏமாத்த எவ்வளவோ வழி இருக்கும் போது எதுக்கு இன்னைக்கு இப்படி ஒரு காதல் கதையை நான் கேட்டேன். அதுவும் சொன்னது எங்க department Mr.Perfect சரவணன்.
என்னைச் சுற்றி நடப்பவை ஏதும் புரியாதவனாய் என்னையும் அறியாமல் காதலை பற்றி கிறுக்க ஆரம்பித்திருந்தேன்....
Thursday, July 15, 2010
மதராசப்பட்டிணம் - பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே


மதராசப்பட்டிணம் - இந்த படத்தை பற்றி விமர்சனம் செய்ய நான் தகுதியான ஆள் இல்லை. A class movie. இந்த பாட்டின் மீது எனக்கு பைத்தியமே பிடித்துவிட்டது. பாட்டிற்கு முன் வருகின்ற சீனைப் பற்றி சொல்ல வார்த்தை இல்லை. எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை தந்தது. பாடலைப் பாடியவர் எனக்கு மிகவும் பிடித்த ரூப் குமார் ரத்தோட். "வெண்மதி வெண்மதியே நில்லு - மின்னலே", "ஒரு தேவதை - வாமனன்" பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர். 'விஜய்' என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படி ஒரு அழகான காவியத்தை தந்த இயக்குனருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்குள்.
பாடல் வரிகள் இதோ,
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
ஓ ஓ ஓ
ohh where would I be
without this joy inside of me
it makes me want, to come alive
it makes me want to fly
into the sky...
ohh where would I be
if I didn't have you next to me
ohh where would I be
ohh where...
ohh where...
பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
என்ன புதுமை.
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
இது எதுவோ...
படம்: மதராசப்பட்டிணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார் ரத்தோட், ஹரிணி, ஆண்ட்ரியா
Monday, July 05, 2010
அடைமழை காதல்
"வாழ்க்கை இதோட முடியப் போறது இல்லை, இன்னும் எவ்வளவோ இருக்கு. காலம் தான் உனக்கு பதில் சொல்லும். கடவுள் எல்லாமே உன் நல்லதுக்கு தான் பண்ணுவாரு. கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு வாழ்க்கையை வாழு. வாழ்க்கையில அடுத்து என்ன தான் நடக்கப் போகுதுன்னு பார்க்கலாம். உன்னோட மனசை பக்குவப் படுத்த தான் கடவுள் இப்படி எல்லாம் பண்றாரு. Whatever Happens, Life has to go on......" இவை எல்லாம் கடந்த நான்கு மாதங்களில் எனக்கு கிடைத்த சொற்பொழிவுகள். என்னோட நண்பர்களில் யாராவது என்னோட நிலைமையில் இருந்திருந்தாலும் கண்டிப்பாக நானும் இப்படி தான் இலவசமாய் உபதேசம் செய்திருப்பேன். காசா? பணமா?
காதல். இந்த வார்த்தைக்கு என்னோட அகராதில பொருள் தேடினால் அவளோட பேரு மட்டும் தான் இருக்கும். எங்க ரெண்டு பேருக்கும் இருந்த காதலை மத்தவங்களுக்கு புரிய வைக்க முடியுமா என்ன? என் மேல எவ்வளவு பைத்தியமா இருந்தான்னு அவளுக்கே தெரியாது. 'ஏன்டி இப்படி என்னைத் தனியா விட்டுட்டு போன?' என்று எனக்குள் இருக்கும் அவளிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். அவளை மட்டுமே நினைத்தபடி என் வாழ்நாளில் இன்னொரு பக்கத்தை புரட்டி முடித்தேன். நள்ளிரவு 12 மணி. கேப் டிரைவர் அண்ணா கால் பண்ண வீட்டுக்கு கிளம்பினேன். எப்பொழுதும் என்னோடு பயணம் செய்யும் வெண்ணிலவைத் தேடினேன். காணவில்லை. கண்களை மூடினேன் அவளோடு மட்டும் பேசுவதற்காக. கடந்த ஆண்டு இதே நாளில் என் வாழ்க்கை என்னும் நாட்குறிப்பில் அவள் எழுதிய பக்கத்தை வாசிக்க ஆரம்பித்தாள்.
"என்ன மா பண்ணிட்டு இருக்க? உறங்கிட்டு இருக்கியா?"
'உனக்கே இது நல்லா இருக்காடி? நைட் இரண்டு மணிக்கு கால் பண்ணிட்டு உறங்கிட்டு இருக்கியான்னு கேட்குற? என்னாச்சு இப்ப தான போன் பேசிட்டு உறங்கப் போறேன்னு சொன்ன?'
"இல்ல மா. நாளைக்கு நான் ஊருக்குப் போறேன்ல. இரண்டு நாள் உன்னோட குரலைக் கேட்க முடியாது. அதான் மா. உன்னை ரொம்ப மிஸ் பண்ற மாதிரி இருக்கு மா"
'ஹே லூசு, just 2 days. போயிட்டு வா. நான் Mondayக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்'
"காலண்டர்ல சனி, ஞாயிறு இல்லாம இருந்து இருக்கலாம்ல மா?"
'உலகத்துல இருக்கிற எல்லா software engineers சேர்ந்து உன்னை கொல்லப் போறாங்க நீ பேசுறத மட்டும் கேட்டா'
சிரித்தாள்.
"என்னைய மாதிரியும் யாராச்சும் இருப்பாங்க மா. சனி, ஞாயிறு வேணாம்னு"
'மேடம்க்கு என்னாச்சு இன்னைக்கு? என்னை அவ்வளோ மிஸ் பண்றியா?'
"எஸ் மா. என்கிட்ட வார்த்தை இல்லை எவ்வளோன்னு சொல்ல"
'இங்க பாரு லூசு, இப்ப என் கூட பேசிட்டு இருக்க. நான் அதை மட்டும் தான் நினைக்கிறேன். நீ ஊருக்குப் போறதை யோசிச்சா நானும் மூட் அவுட் ஆகி எதுவுமே பேச முடியாது'
"ஆமால்ல. சரி இப்ப நான் நல்லாப் பேசுறேன் மா. பையா படத்துல பாட்டு கேட்டியா மா? ஒரு பாட்டுல இந்த இரண்டு வரி வரும்..
என் அதிகாலை என் அதிகாலை உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும். என் அந்திமாலை என் அந்திமாலை உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்"
பாடியே காண்பித்தாள். அந்தப் பாடலை அழகான பெண் குரலில் கேட்ட ஒரே ஆள் நானாக மட்டும் தான் இருப்பேன். அவளே தொடர்ந்தாள்.
"இந்த பாட்டுல வர்ற மாதிரி என் லைப் இருக்கணும் மா. சந்தோசம்னா என்னன்னு என்கிட்ட யாராச்சும் கேட்டா நான் இதை தான் சொல்லுவேன்"
எனக்கான அவள் காதலை ரசித்தேன்.
'ஆனால் இந்த பாட்டை நமக்காக கொஞ்சம் மாத்த வேண்டி இருக்கே'
"என்னான்னு?"
'நீயே யோசிச்சு பாருடி. நாம உறங்கப் போறது எல்லாரும் எழுந்த பிறகு. முழிக்கிறது எல்லாரும் உறங்கும் போது. அதனால..'
செல்லமாக சிணுங்கினாள்.
"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அதை சொன்னேன் மா"
'அப்ப கல்யாணம் முடியுற வரை இப்படி நைட் ஷிப்ட் தானா?'
"எப்படினாலும் காலைல ஆபீஸ்ல ஒன்னும் வெட்டி முறிக்கப் போறது இல்லை. அதனால என்கிட்ட பேசுறதுல ஒன்னும் குறைய மாட்ட. பேசப் பிடிக்கலைன்னா வச்சுட்டு போகலாம்"
சின்னதாய் கோபித்தாள்.
'சரி கோபப்படாதடி'
"கோபமா தான் இருக்கேன். என் கோபம் குறைய ஏதாச்சும் சொல்லு. என்னை எவ்வளோ பிடிக்கும் உனக்கு?"
'எவ்வளவுன்னு சொல்லத் தெரியல. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ..'
"பிடிக்கலையா?"
'பிடிச்சிருக்குன்னு சொல்ல வந்தேன்டி. உன்னைத் தவிர வேற யாரையும் பிடிக்கிறது இல்லை'
"அதான பார்த்தேன். இந்த weekend என்ன மா பண்ணப் போற?"
'football விளையாடப் போவேன். வேற... பிரண்ட்ஸ் கூப்பிட்டால் படத்துக்குப் போவேன்'
"வெளிய போனா சீக்கிரம் ரூம் வந்திடு மா. லேட் நைட் வெளிய சுத்தாத ப்ளீஸ். அப்புறம் இந்த football விளையாடப் போறது எல்லாம் கல்யாணம் வரை தான். அதுக்கப்புறம் உன்னை எங்கேயும் போக விடமாட்டேன். எப்பவும் என்கூட தான் இருக்கணும். நானும் எப்பவும் உன்கூட தான் இருப்பேன். என்னைத் தனியா விட்டுட்டு போயிடக் கூடாது. உன்னை விட்டுப் பிரிந்து என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது மா"
'சரிங்க மேடம். வேற ஏதாச்சும் இருக்கா? நம்ம வீட்டுக்கு நானே கள்ளச் சாவி ரெடி பண்ணனும் போலையே'
"அப்படி மட்டும் நீ என்னை ஏமாத்திட்டு விளையாடப் போனா உன்னை groundல விரட்டி விரட்டி அடிப்பேன்"
சிரித்தேன்.
'இப்படி தனியா மாடியில நின்னு பேசுறியே உனக்கு பயமா இல்லையா?'
"எதுக்கு பயப்படனும்? போன்ல நீ இருக்க. நம்ம ரெண்டு பேருக்கும் பாதுகாப்பா நிலா இருக்காங்க. நிலாவுக்கு இந்தப் பக்கம் நான் இருக்கேன். அந்தப் பக்கம் நீ மா.நான் எப்பவும் இப்படி தான் நினைப்பேன். ஊருக்குப் போறப்ப எல்லாம் நிலா வர்றதுக்காகத் தான் காத்துகிட்டு இருப்பேன். நிலாவை பார்த்தா நீ என்கூட இருக்கிற மாதிரியே இருக்கும் மா"
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
'என்னை இவ்வளோ லவ் பண்றியே.. do i really deserve ur love pa?'
"இப்படி எல்லாம் கேட்டு என்னை கஷ்டப் படுத்தாத மா. நான் எல்லாத்தையும் சொல்றேன். நீ சொல்லமாட்ட. நீ என் மேல எவ்வளோ பைத்தியமா பாசமா அக்கறையா காதலா இருக்கன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். நம்மளை மாதிரி யாருமே இந்த உலகத்துல இருக்க முடியாது மா"
'கரெக்ட் தான் நீ சொல்றது. எல்லாரும் வாசல் தெளிச்சு கோலம் போட ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம இரண்டு பேரு மட்டும் தான் இன்னும் உறங்கவே இல்லை. நம்மளை மாதிரி யாருமே இருக்க முடியாது'
"ச்சி போடா கிண்டல் பண்ணாத. இன்னும் 5 mins பேசிட்டு உறங்கப் போலாம். ஒகே வா?"
'இல்லை இன்னும் 10 mins பேசிட்டுப் போலாம். ஒரு நிமிஷம்டி சமையல் பண்ற அக்கா வந்துட்டாங்க. என்ன சமையல் பண்றதுன்னு சொல்லிடுறேன் அவங்கள்ட்ட'
"நீ எதுவும் சொல்ல வேணாம். போனை அவங்க கிட்ட கொடு நான் சொல்லிக்கிறேன் என்ன சமைக்கணும்னு. எப்ப பார்த்தாலும் ஒரே மெனு தான், இன்னைக்காவது வேற ஏதாச்சும் சாப்பிடு"
போனை அக்காவிடம் கொடுக்க 5 நிமிடங்கள் பேசினாள். இது எல்லாம் இன்னைக்கு ஒரு நாளைக்கு சமைக்கணுமா என்று அந்த அக்கா கேட்டது என் காதில் விழுந்தது. அக்கா முகத்தில் கவலை தெரிந்தது, சமைத்து விட்டு இன்று சீக்கிரம் போக முடியாதே என்று.
'என்னடி சொன்ன அந்த அக்கா இவ்வளோ சோகமா ஆயிட்டாங்க'
"எப்ப பார்த்தாலும் லெமன் சாதம், தக்காளி சாதம், வெஜ் ரைஸ் இதான் சமைக்கிறாங்க. அதான் இன்னைக்கு டிபனுக்கு சப்பாத்தி, தக்காளி சட்னி, மதியத்துக்கு சாம்பார், இரண்டு பொறியல், ரசம், அப்புறம் இப்ப உனக்கு பால் சூடு பண்ணி தரச் சொன்னேன், உன்னோட லஞ்ச் பாக்ஸை நல்லா கழுவச் சொன்னேன், உன்னோட ட்ரெஸ்ஸ ஊற வச்சு துவைக்கச் சொன்னேன் நீ ஊற வைக்கவும் மறந்திடுவன்னு, உன் ரூம்ம கிளீன் பண்ணச் சொன்னேன் சாயங்காலம். இவ்வளவு தான் சொன்னேன். அப்புறம் நம்ம கல்யாணத்துக்குப் பிறகு அவங்களை வரவேணாம்னு சொல்லிட்டேன் மா"
'உனக்கும் சமைக்கத் தெரியாதே!'
"தெரியுமோ தெரியாதோ நான் சமையல் பண்றத தான் நீ சாப்பிடனும்"
'நல்ல சாப்பாடு என்னைக்கு கிடைக்கும்னு தெரியலையே'
"அடிங்க. இங்க தூறல் விழ ஆரம்பிக்குது மா திடீர்னு... ஹையா மழையும் வருது"
'நனையாத. கீழ இறங்கி ரூம்க்கு போடி. உன் உடம்புக்கு ஏதாச்சும் ஆயிடப் போகுது. ப்ளீஸ் பா'
"நோ மா. நனையப் போறேன். போன்ல நீ. என்னை நனைச்சுக்கிட்டு மழை. எப்படி இருக்கு தெரியுமா? இப்படி ஒரு மழைக்க்காகத் தான் இவ்வளவு நாள் காத்துக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு தான் வந்திருக்கு. I am soooooooo soooooo happy"
'இப்பவே இந்த மழைல எல்லாம் நனைஞ்சுக்கோ. கல்யாணத்துக்குப் பிறகு குடையை எடுத்துட்டு ஓடி வந்திடுவேன்'
"ha ha ha. உன் குடையை வீசி எறிஞ்சிடுவேன் மா. உன்னோட சேர்ந்து நனையனும் அப்ப தான் என்னோட முழுக் கனவும் நனவாகும்"
"சார் 100 Feet Road வந்திடுச்சு, எந்த கட்ல திரும்பனும் உங்க வீட்டுக்கு" - டிரைவர் அண்ணா.
'நான் இங்கயே இறங்கிக்கிறேன் அண்ணா'.
"சார் மழை பயங்கரமா பெய்யுது. லேட் நைட் வேற. எப்படி போவீங்க தனியா?"
'நான் தனியா இல்லை அண்ணா. என் துணையோட தான் இருக்கேன்' என்று சொல்லிவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
'இதோ நானும் நனைய வந்துட்டேன்டி...'
நாங்கள் இருவர் மட்டுமே நனைந்து கொண்டிருக்கும் இந்த மழை என்றுமே நிற்கப் போவது இல்லை.
ஓட்டுனர் உரிமம்
நான் இன்னும் ஓட்டுனர் உரிமம்எடுக்கவில்லை என்று
நண்பர்கள் கேலி பேசுகிறார்கள்.
அவர்களிடம் எப்படி சொல்வேன்,
உன்னை வட்டமடித்தால்
உரிமம் கிடைக்கும் என்று
விதிமுறை இருந்திருப்பின்,
உன்னைச் சுற்றி எட்டு என்ன,
என் இதயத்தையே போட்டுக்
காண்பித்து என்றோ உரிமை
பெற்றிருப்பேன் என்று...!
உன் பிறந்தநாள்
உலகத்தில் கொண்டாடப்படும்ஒரே பெண் தெய்வத்தின்
பிறந்தநாள் உன்னுடையது
மட்டும் தான்...!
'பிள்ளை வரம்' வேண்டி
அம்மனை வழிபடுவார்கள்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அந்த அம்மனையே வரமாய்
பெற்றது எப்படி என்று
உன் தாய் தந்தையிடம்
கேட்டுச் சொல்வாயா?
Thursday, June 17, 2010
என்ன சொல்லப் போகிறாய்..
நான் கார்த்திக். பொங்கல் லீவுக்காக ஊருக்கு வந்து இருக்கிறேன். வீணாவும் வீட்டுக்குப் போய் இருக்கிறாள். எப்பொழுதெல்லாம் வீணா, ஊருக்குப் போகிறாளோ அந்த நேரங்களில் அவளிடம் பேசவே முடியாது. எஸ்எம்எஸ் மட்டும் வரும். இரண்டு நாள் ஆகியும் என் வீணாவிடம் இருந்து எஸ்எம்எஸ் ஏதும் வரவில்லை. ஒவ்வொரு முறை பீப் சவுண்ட் வரும் போதும் ஓடோடிப் போய் மொபைலை பார்ப்பேன். என் அருமை நண்பர்கள் எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு அதிகமா பொங்கல் வாழ்த்து அனுப்பி பாசத்தை பொழிந்து இருக்கிறார்கள். குட்டி போட்ட பூனை மாதிரி மொபைலை சுத்தி வந்தேன். சன் மியூசிக்கில் எங்கள் இருவருக்கும் பிடித்த "எங்கேயோ உன்முகம் நான் பார்த்த ஞாபகம்" பாடல் ஓடிக்கொண்டிருக்க எனக்கு ஒரு ஐடியா வந்தது. 'Karthik : Veenu, I Miss you sooo much di' என்று அனுப்பினேன் சன் மியூசிக்கிற்கு. வீணு டிவி பார்த்துட்டு இருப்பாளான்னு தெரியாது இருந்தாலும் அனுப்பினேன் என் காதல் மேல இருந்த நம்பிக்கையில. பாட்டு முடியப் போகிற நேரத்தில் சன் மியூசிக்கிற்கு வீணு பதில் அனுப்பினாள் "Veenu : Karthik, I Miss you sooooo much than you do" என்று.
இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வீணுவிடம் இருந்து கால் வந்தது. "'நீ சாப்பிடு, நான் மொபைல எடுத்துட்டு வர்றேன்" என்று அம்மா சொல்ல எனக்கு பகீர் என்று ஆகி விட்டது. அவள் பேரை நான் 'வீணா குட்டி' என்றுல்ல வச்சு இருக்கேன். அம்மா யாருடா இதுன்னு கேட்க நான் ஏதோ உளற ஆரம்பித்தேன். 'இல்லம்மா, எங்க ஆபீஸ்ல ரெண்டு வீணா வேலை பார்க்கிறாங்க, இந்த பொண்ணு குட்டையா, ஒல்லியா இன்னொரு வீணாவுக்கு குட்டி மாதிரி இருக்கும், அதான் அப்படி பேர் வச்சு இருக்கோம்' என்று சொல்லி சமாளித்தேன். சாப்பிட்டு முடித்து விட்டு போனை எடுத்துக்கொண்டு மாடிக்கு ஓடினேன்.
"இவ்வளவு நேரம் என்னடா பண்ணிட்டு இருந்த? என்கிட்ட பேசுறத விட உனக்கு என்ன முக்கியமான வேலை?" என்றாள் செல்லக் கோபத்துடன். நான் கீழே சாப்பிடும் போது நடந்ததை சொன்னேன். "நான் எவ்வளவோ டைம் சொல்லி இருக்கேன்ல உங்கிட்ட ஊருக்குப் போகும் போது பேரை மாத்திக்கோடான்னு. என்னைப் பாரு நான் எவ்வளோ தெளிவா இருக்கேன். இந்த விஷயத்துல நான் தான்டா பெஸ்ட்" என்று கிண்டல் அடித்துக் கொண்டிருந்தாள். அவள் இப்படி கலகலப்பாக பேசுவதுதான் எனக்கு அவளிடம் மிகவும் பிடித்ததே. அவள் சிரிக்கணும் அதுக்காக நான் கோமாளியாகக் கூட தயார். அவள் சிரிப்பதை ரசித்துக் கொண்டிருக்க அவளோ "என்ன எதுவுமே பேசமாட்டேங்கிற? போ பா போய் மிச்சம் இருக்கிறத சாப்பிடு. சாப்பாட பார்த்தா உனக்கு தான் வேற எதுவுமே ஞாபகம் இருக்காதே. எவ்வளோ கஷ்டப்பட்டு கால் பண்ணிருக்கேன்னு எனக்கு தான் தெரியும்" என்று கடிந்து கொண்டாள். 'ஹே பேசிட்டு தானடி இருக்கேன், எப்படி பொங்கல் போகுது' என்றேன். "பொங்கலா!! அனேகமா நாளைக்கு தான் எனக்குப் பொங்கல்னு நினைக்கிறேன்" என்றாள். 'என்னடி சொல்ற!' என்றேன். "ஆமாம்டா, வீட்ல அப்பா கல்யாண பேச்சை எடுக்கிறாரு நான் உன்னைப் பத்தி சொல்லிடலாம்னு இருக்கேன்" என்றாள். 'சரிடி, அவர் நல்ல மூட்ல இருக்கும் போது சொல்லு, சொல்லிட்டு எனக்கு கால் பண்ணு உடனே, நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்' என்றேன். "சரிடி கார்த்திகா, நீ போய் நல்லா சாப்பிடுடி, அம்மா அப்பா வந்துட்டாங்கடி, எனக்காக சாப்பிட வெயிட் பண்ணுவாங்கடி, அப்புறமா பேசுறேன்டி" என்று சொல்லி விட்டு வைத்தாள். அடி 420 என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.
வீணுவிடம் இருந்து கால் வரவே இல்லை. மொபைல் சுவிட்ச் ஆப் வேற செய்திருந்தாள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அம்மாவிடம் எதெற்கெடுத்தாலும் கோபித்துக் கொண்டு இருந்தேன். எப்ப சென்னை போவோம், போய் வீணுவை பாப்போம் என்று இருந்தது. அவளின் தோழி சுபாவிற்கு கால் பண்ணிப் பார்த்தேன். சுபாவும் எனக்கும் தெரியல என்றாள். நைட் முழுவதும் அவளுக்கு கால் பண்ணிக் கொண்டே இருந்தேன். சுவிட்ச் ஆன் செய்யப்படவே இல்லை. திங்கள்கிழமை, எப்பொழுதும் கடைசி ஆளாக ஆபீஸ் போகும் நான் அன்று முதல் ஆளாக சென்றேன். என்னோட வேலையைப் பார்க்காமல் ஒவ்வொருவரும் வருவதை போவதை நான் கணக்கெடுத்துக் கொண்டிருந்தேன். ஆபீஸ்க்கு வரவேண்டிய 134 பேர் வந்தாகிவிட்டது என் வீணுவைத் தவிர. சுபாவிடம் கேட்டதற்கு 'Veena will come in at 12' என்று பதில் வந்தது. கடிகாரத்தில் நிமிட முள்ளிற்குப் பதில் நான் நகர்ந்து கொண்டு இருந்தேன்.
மணி 12 வீணா வந்தாள். பொதுவாக ஒரு 'ஹாய்' சொன்னாள் எனக்கும் சேர்த்து தான். லஞ்ச் போலாமா என்று கேட்டதுக்கு எனக்கு பசிக்கல என்று மட்டும் பதில் வந்தது. 'எனக்கும் பசிக்கல, நானும் போல' என்றேன். சரி என்றாள். காலையிலும் சாப்பிடவில்லை இவளுடன் சேர்ந்து பசியும் என்னை இம்சை செய்தது. 'ஏதாச்சும் ப்ராப்ளமா வீணு' என்றேன். என்னோட பெயர் வீணா என்றாள். 'ஹே உனக்கு என்னாச்சு, என்னவோ மாதிரி பேசுற?' என்றேன். அதற்கு பதில் தந்தாள் 'இவ்வளோ நாள் தான் தப்பா பேசுனேன் இப்ப தான் தெளிவா பேசுறேன்' என்று. 'போதும் வீணா விளையாடினது, எனக்குப் பசிக்குது வா சாப்பிட போலாம்' என்றேன். "இங்க பாரு கார்த்திக், உனக்கும் எனக்கும் இனிமேல எதுவுமே இல்ல. எங்க வீட்ல உன்னைப் பத்தி பேசியாச்சு. முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்க சாதிக்குள்ள மட்டும் தான் கட்டிக் கொடுப்பாங்களாம். அடுத்த சாதில இருக்கிறவங்க அவங்களுக்கு மனுசங்க இல்லையாம். நீயா, அவங்களான்னு நான் முடிவு பண்ணனுமாம். எனக்கு அவங்களும் முக்கியம் கார்த்திக். நான் அவங்க பக்கம் போயிடுறேன் கார்த்திக். ப்ளீஸ் என்னை விட்டுடு. அவங்க தான் என்னைப் புரிஞ்சுக்கல நீயாவது என்னைப் புரிஞ்சுக்கோ" என்று கூறி அழ ஆரம்பித்து விட்டாள். 'முதல்ல எல்லாப் பெத்தவங்களும் சொல்றது தான், பாத்துக்கலாம் வீணா' என்றேன். "உனக்கு அவங்களைப் பத்தி தெரியாது கார்த்திக், அவங்க எப்பவும் மாற மாட்டாங்க. 25 வருஷம் கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா அப்பாவுக்காக என்னோட காதலை தியாகம் பண்றதா முடிவு பண்ணிட்டேன். இதுல உன்னோட வாழ்க்கையை பலி ஆடா ஆக்குனதுக்கு மன்ன்னிசிடு. Sorry for everything Karthik" என்றாள். நான் ஒன்றும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். "கார்த்திக் நீ போய் முதல்ல சாப்பிடு, உன் கோபத்தை சாப்பாடு மேல காண்பிக்காத. நீ பசி தாங்க மாட்ட" என்றாள். இப்படி என்னை பத்தி இவ்வளவு அக்கறையா பாசமா இருக்கிறவளை எப்படி மிஸ் பண்ணிட்டு வாழ முடியும்னு சொல்லுங்க?
அன்றைய தினம் முழுதும் வேலை ஓடவில்லை. வீணா இல்லாம என்னால ஒரு வாழ்கையை யோசிச்சே பார்க்க முடியல. கண்டிப்பா நான் இல்லன்னா வீணாவும் சந்தோசமா இருக்க மாட்டா. ஆனால் அவ ஒரு முடிவு பண்ணிட்டா கண்டிப்பா அதை மாத்த மாட்டா. அம்மா அப்பாவுக்காக என்னனாலும் பண்ணுவா என்று எனக்கு நல்லாவே தெரியும். அவள் வாழ்க்கையை தியாகம் பண்ணக் கூட தயாரா இருப்பா. இப்படிப்பட்ட பொண்ணுக்கு அப்படி ஒரு அம்மா அப்பாவைக் கொடுத்த கடவுளைத் திட்டினேன். என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஷங்கர் கால் பண்ணினான் 'டேய் டைம் ஆச்சு, வீட்டுக்குப் போலாம்' என்று. சரியாக 34 நிமிடங்களில் வீட்டை அடைந்தேன். டிவியில் புதிதாக ஒரு படத்தின் trailer ஓடிக்கொண்டு இருந்தது. அதில் என் வாழ்வின் பாதிப்பும் இருந்தது. நாயகனும் நாயகியும் பேசிய வசனங்கள் நான் வாழ்வில் பேசியது கேட்டது போல இருந்தது. 'விண்ணைத்தாண்டி வருவாயா' பிப்ரவரி 26 முதல் என்று விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த சேனலை மாற்றாமல் அந்த படத்தில் trailer ஐ மறுபடியும் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு நான்கு முறை பார்த்து விட்டு ஏதோ ஒன்று முடிவு செய்தவனாய் உறங்கப் போனேன்.
மறுநாள் ஆபீஸ் போனதும் முதல் வேலையாக youtube இல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் trailerஐ தேடிப்பிடித்தேன். வீணாவுக்கு அனுப்பினேன்.
'வீணா, பார்த்தியா?'
"ஹ்ம்ம்"
'என்ன பீல் பண்ண?'
"இன்னொரு லவ் ஸ்டோரி. அவ்வளவு தான்"
'உனக்கு வேற எதுவுமே தோனல?'
"என்ன தோனனும்?"
'ஒன்னும் இல்ல வீணா, நான் ஒன்னு முடிவு பண்ணிட்டேன்'
....
'இந்த படத்தை பார்ப்போம். ஏதோ நம்ம லைப் மாதிரி இருக்கு. இதுல க்ளைமாக்ஸ் என்னவா இருக்கோ அந்த முடிவையே நாமளும் எடுத்துக்கலாம். Give me a chance please'
"உனக்கு மறை கழன்டிடுச்சா?? படத்தை வச்சு வாழ்க்கையை முடிவு பண்ணாலாம்னு சொல்ற.. லைப்னா என்னன்னு தெரியாதா உனக்கு? அவ்வளவு ஈஸியா போயிடுச்சா? என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது கார்த்திக். சாரி."
'நான் தெளிவா தான் இருக்கேன். நீ இல்லாம என்னால வாழ முடியாது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரில. அதான் இந்த முடிவுக்கு வந்து இருக்கேன். கடவுள்ட்ட பூ போட்டு பார்த்து சில முடிவை நாம எடுக்கிறது இல்லையா?? பூவா தலையா போட்டு பார்க்கிற மாதிரி, ஜோசியத்த நம்புற மாதிரி.. அந்த மாதிரி தான் வீணா.. வேற வழி தெரியாம என் லைப்ல இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கிறேன்'
"சரி படத்துல ஒரு வேளை லவ்வர்ஸ் பிரிஞ்சுட்டா அந்த முடிவை எடுத்துக்குவியா?"
'நீ ஏன் பிரியிறத பத்தி தான் யோசிப்பியா? சேருறது பத்தி நான் யோசிக்கிறேன் அதான் இந்த படத்துக்காக என் வாழ்கையவே பந்தயப் பொருளா ஆக்குறேன்'
"சரி கார்த்திக். உன்னோட முடிவுக்கே நானும் வர்றேன்" என்றாள். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி தான் என்றாலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்னால். படம் ரிலீஸ் ஆக இன்னும் 34 நாட்கள் இருக்கிறது.
நைட் ரூமிற்கு போய் ஷங்கரிடம் நடந்ததை சொன்னேன். "டேய் லவ் பண்ணா இப்படி எல்லாம் தான் யோசிப்பாங்கலாடா? love is blindன்னு கேள்விப் பட்டிருக்கேன். நீ அதை நிரூபிக்கிற டா. உன்னை என் நண்பன்னு சொல்லிக்கிறதில்ல பெருமையா இருக்குடா" என்று கிண்டல் அடித்தான். 'கண்டிப்பா என் நிலைமை உனக்குப் புரியாதுடா . i dont want to lose her in my life. she is a gem. எனக்கே தெரியலடா நான் ஏன் இப்படி முடிவு பண்ணேன்னு' என்றேன். "பெஸ்ட் ஆப் லக் கார்த்திக்" என்றான்.
நாட்கள் ஓட ஆரம்பித்தன. 'Judgement Day' க்காக காத்துக் கொண்டிருக்கிறேன் ஒரு வித பயத்துடன். இருந்தாலும் என் காதல் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. 'டேய் ஷங்கர் சிம்பு, த்ரிஷா, கௌதம் மேனன், இல்ல அந்த படத்துல வொர்க் பண்ண யாரோட மொபைல் நம்பராது எனக்கு கிடைக்குமா?' என்றேன். என்னை ஏற இறங்கப் பார்த்தான். "என்னைக்காச்சும் நான் உங்கிட்ட சொல்லிருக்கேனா அவங்க எல்லாம் என் ப்ரண்ட்ஸ்ன்னு, என்கிட்ட நம்பர் கேட்குற.. பொறுடா இன்னும் 20 நாட்கள் தான இருக்கு" என்றான். 'ஹ்ம்ம்' என்றேன்.
பின்னொரு நாள் நானும் சங்கரும் ஆபீஸ் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தோம். 'ஷங்கர், கொஞ்ச நாள் முன்னால ஏதோ ஒரு படம் தியேட்டருக்கு வர்றதுக்கு முன்னாலேயே நெட்ல கிடைசிடுசுன்னு ஒரு நியூஸ் சொன்னியே.. அந்த மாதிரி இந்தப் படமும் நெட்ல ரிலீஸ் ஆயிடுச்சாடா? கிடைக்குமா டா??' என்றேன். எரித்து விடுவது போலப் பார்த்தான். "டேய் அந்த படத்த நான் தான் திருடி நெட்ல ரிலீஸ் பண்ண மாதிரி சொல்ற. அப்பா சாமி!! விண்ணைத்தாண்டி வருவாயா வர்றதுக்குள்ள என்னைய உள்ள தள்ளிடலாம்னு ஏதும் ஐடியாவாடா? என்னை ஏதோ பழி வாங்க பிளான் போட்டு இருக்கியா?" என்றான். 'இல்ல ஷங்கர், பயம் அதிகமாயிட்டே இருக்கு. அதான்' என்றேன். "புரியுதுடா, ஆனால் நீ வெயிட் பண்ணித் தான் ஆகணும். கண்டிப்பா படத்துல நல்ல முடிவா தான்டா இருக்கும். மனச போட்டு ரொம்ப குழப்பாத" என்றான்.
படம் ரிலீஸ் இன்னும் கொஞ்சம் தள்ளிப் போகக் கூடாதா என்று இருந்தது. காலேஜ்ல செமெஸ்டருக்கு பயந்து இருக்கேன். ஆனால் இந்த அளவுக்கு பயந்தது இல்லை. 24 ஆம் தேதி புக்கிங் ஆரம்பிக்க சத்யமில் இரண்டு டிக்கெட்டுகள் புக் செய்தேன். வீணாவிற்கு போன் செய்து first day first show புக் பண்ணியாச்சு என்றேன். எப்பொழுதும் இப்படி புக் செய்தால் என்னோடு சண்டை போடுபவள் இந்த முறை எதுவும் பேசாமல் "சரிடா நான் சத்யம் வந்திடுறேன்" என்றாள். 'முடிவு என்னவா இருக்கும்னு நினைக்கிற வீணா?' என்றேன். "நம்ம லவ் எப்படி முடியப் போகுதுன்னு நான் யோசிச்சிட்டு இருக்கேன்" என்றாள்.
26 பிப்ரவரி 2010. காலை 6.34 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தேன். வடபழனி கோவிலுக்குச் சென்றேன். முருகன் பேசுவது எனக்கே கேட்டது "டேய் பாவி! இது உனக்கே ஓவரா இல்ல. பரீட்சை டைம்ல கூட நீ என்னைப் பார்க்க வந்தது இல்லையேடா" என்று. 'வேற வழி இல்ல முருகா, எக்ஸாம்ல பெயில் ஆனா திரும்ப அதே பரீட்சையை எழுதிக்கலாம். ஆனால் இப்ப லைப்ல வீணாவை விட்டுட்டேன்னா எப்பவும் திரும்ப கிடைக்கமாட்டாளே' என்றேன். சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து விட்டு கிளம்பினேன்.
10 மணிக்கு சத்யம் வந்து சேர்ந்தேன். வீணாவும் நின்று கொண்டிருந்தாள். 'போய் hall ticket வாங்கிட்டு வந்திடுறேன் வீணா' என்றேன். "என்ன?" என்றாள். 'ஒன்னும் இல்ல வீணா, எக்ஸாம் எழுதுற மாதிரி இருக்கு. அதான்' என்றேன். சிரித்தாள். படம் பார்க்க போகாமல் அவள் சிரிப்பதை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கலாம் போல இருந்தது. இருவரும் உள்ளே நுழைந்தோம். படம் ஆரம்பிக்க இன்னும் 5 நிமிடங்கள் இருந்தது. 'வீணா எனக்கு பயமா இருக்கு, நீ இல்லாம என்னால வாழ முடியாதுடி' என்றேன். "படம் ஆரம்பிச்சிடுச்சு. பாரு கார்த்திக்" என்றாள்.
முதல் ஸீனே என்னைத் தூக்கி வாரிப் போட்டது. அழும் நிலைக்குச் சென்று விட்டேன். சிம்பு பெயர் கார்த்திக் வேறு. என்னை ஒரு முறை பார்த்தாள். நிறைய காட்சிகள் எங்கள் இருவருக்குள் நடந்தது போல இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே வருடத்தில் B.E. முடித்தோம் என்றாலும் அவள் என்னை விட பத்து மாதம் மூத்தவள். அவளை இந்த வயது வித்தியாசத்தில் நான் சமாதானப்படுத்த பட்டபாடு இருக்கிறதே!! சிம்பு தோற்றுப் போனார். சிம்புவிடம் த்ரிஷா 'its all over now' என்று சொல்லிவிட்டுப் போக நான் வீணாவைப் பார்த்தேன், எதுவுமே தெரியாத மாதிரி படத்தில் மூழ்கி இருந்தாள். சர்ச் கல்யாண ஸீன் வர பதற்றம் அதிகமாகியது. நான் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு கீழே குனிந்து கொண்டேன். 'டேய் இப்ப என்ன சொன்னா தெரியுமா, இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல, கல்யாணம் வேணாம்னு சொல்லி இந்தக் கல்யாணத்த நிறுத்திட்டாடா தம்பி' என்று சிம்பு நண்பராக வரும் கணேஷ் சொன்ன பின் தான் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். பாதிக் கிணறைத் தாண்டியது போல இருந்தது. சரியாக இன்டர்வலும் வந்தது. படத்தில் த்ரிஷா கல்யாணம் நின்று போனதற்கு சிம்பு கூட என் அளவுக்கு சந்தோஷப் பட்டு இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். இதோட படத்த முடிச்சு இருக்கலாம்ல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
இரண்டாவது பாதி படம் ஆரம்பித்தது.
வீணா நாம பேசியதை கௌதம் எங்கேயோ ஒளிஞ்சு இருந்து கேட்டுட்டாரா என்றேன். அதே புன்னகையைப் பதிலாய், இல்லை பரிசாய்த் தந்தாள். காதல், சண்டை, பிரிவு என்று படம் போய்க் கொண்டு இருந்தது. அமெரிக்காவில் சிம்புவும் த்ரிஷாவும் கல்யாணம் செய்து கொள்ள நான் 'Yes' என்று சொல்லி விசிலடித்து கைதட்ட ஆரம்பித்து விட்டேன். 'வா வீணா கிளம்பலாம்' என்றேன் சந்தோஷத்தில். அவளோ ஸ்க்ரீனைக் காண்பித்தாள். 'A film by Karthik' என்று இருந்தது. என் முகம் வாடிப் போனதைக் கண்டிப்பாக கவனித்து இருப்பாள். அடுத்து வந்த ஒவ்வொரு காட்சியும் என்னை அழ வைத்தது. படம் முடிய இருவரும் வெளியே வந்து அதே சத்யம் வாசலில் நின்று கொண்டு இருந்தோம்.
'சரி வீணா நான் கிளம்புறேன், நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல, நாம முடிவு பண்ண படி ...' கண்கள் கலங்க ஆரம்பித்தன. என்னால் பேச முடியவில்லை. என் கண்களைப் பார்த்தாள். அவள் பேச ஆரம்பித்தாள் "நான் முடிவு பண்ணிட்டேன் கார்த்திக். படத்துல வர்ற கார்த்திக்கை கடைசில அப்படி பார்த்ததே என்னால தாங்கிக்க முடியலடா. பிற்காலத்துல அதே நிலைமைல என்னோட கார்த்திக்கை என்னால பார்க்க முடியாதுடா. என்ன ஆனாலும் நீ மட்டும் தான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன்டா" என்றாள். வாழ்க்கையில் முதல் முறையாக சந்தோஷத்தில் என் கண்கள் கலங்க ஆரம்பித்து இருந்தன. "எதுக்குடா இப்ப அழுற, இந்த ராட்சசி கிட்ட இருந்து தப்பிக்க முடியலன்னா?" என்றாள். 'இந்த அழகான ராட்சசி கூட காலம் முழுவதும் வாழப் போகிற சந்தோசத்துலடி' என்றேன். "நல்லா பேசக் கத்து வச்சு இருக்கடா. சரி பைக் எடு" என்றாள். 'வீணா, ரொம்ப சந்தோசமா இருக்கேன் நான் ஆபீஸ் வரலைடி, உன்னை ட்ராப் பண்ணிடுறேன்' என்றேன். "அப்ப ரொம்ப சந்தோசமா இருந்தா என்னைத் தனியா விட்டுடுவியா" என்றாள் சிறு கோபத்துடன் என் தேவதை. 'ஹே நான் அப்படி சொல்லலடி' என்றேன். "மவனே நான் அப்படி எல்லாம் உன்னைத் தனியா விட்டுட மாட்டேன். நானும் ஆபீஸ் போல. lets go for a long drive on ECR" என்றாள். 'ஆபீஸ்?' என்று கேட்டேன். "நேத்தே நம்ம ரெண்டு பேருக்கும் லீவ் அப்ளை பண்ணிட்டேனே. ஏன்டா நீ இன்னும் உன் password ஐ மாத்தலையா?" என்று சிரித்தாள். 'எனக்கு மட்டும் இப்படி ஒரு 420 யை கடவுள் கொடுத்துட்டாரே' என்றேன். "அடிங்க" என்றாள்.
"Thank you Gowtham sir, உங்க படத்தால தான் எங்க வாழ்கையே" என்று என்னையும் அறியாமல் அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டேன். பைக்கை ECRல் செலுத்தினேன். "டேய் கார்த்திக் எந்த நம்பிக்கையில இப்படி ஒரு முடிவுக்கு வந்த? படத்தை வச்சு..??" என்றாள். 'உன் காதல் மேல இருந்த நம்பிக்கையில வீணா. நீ என் மேல வச்சு இருக்கிற அன்பு மேல இருந்த நம்பிக்கையில' என்றேன். வீணா என்னை இறுக்க அணைத்துக்கொண்டு அழகான பல்வரிசைத் தெரிய சிரிக்க ஆரம்பித்தாள். கவிதையாக இருந்தது :-).
