Pages

Friday, January 28, 2011

வரமா சாபமா

கி பி 14-02-2010

கோவை, காலை 10.57

'அங்கிள், நானும் உங்க பொண்ணு மீராவும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம். கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறோம்'


"நீங்க என்ன சாதி, மதம்?"


'மாசத்துக்கு ஐம்பதாயிரம் சம்பாதிக்கிறேன். காலம் முழுவதும் உங்க பொண்ண உங்களை விட பத்திரமா பார்த்துக்குவேன்'


"நீ என்ன சாதி, மதம்"


'உங்க சாதி மதத்தால மீராவுக்கு கிடைக்காத சந்தோஷம் என்னோட வாழ்ந்தா மட்டும் தான் கிடைக்கும்'


"அப்படி ஒரு சந்தோஷம் அவளுக்கு தேவை இல்ல. என் சாதி மதம் கவுரவம் இதெல்லாம் தான் எனக்கு முக்கியம். என் பொண்ணு சந்தோசமா வாழ்றதும் வாழாததும் அவளோட இஷ்டம்"


'எங்க மனச புரிஞ்சுக்கோங்க. ப்ளீஸ்'


"இதுக்கு மேல உங்கிட்ட பேச எனக்கு இஷ்டமில்லை. நீ கிளம்பலாம்"


மாலை 4.34

'மீரா, என்னடி சொல்ற???? நீ எடுத்திருக்கிறது ரொம்ப கோழைத்தனமான முடிவு'


"எனக்கு வேற வழி தெரியலை கார்த்திக். நீ வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ"


'உன்னைத் தவிர வேற யாரையும் என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது மீரா. நீ இல்லாத இந்த உலகத்துல நான் வாழுவேன்னு நினைக்கிறியா?'


"நம்மளால என்ன பண்ண முடியும்னு நினைக்கிற கார்த்திக்?"


'எங்கேயாவது ஓடி போயிடலாம் மீரா. வாழ்றதுக்கு தான் நான் உன்னை காதலிச்சேன். உன்னை பிணமா பார்க்க இல்ல. நீ மட்டும் தற்கொலைன்னு முடிவுக்கு போனா கண்டிப்பா நானும் உயிரோட இருக்க மாட்டேன்'


"நீ எதுக்கு சாகனும்? என்னைக் காதலிச்சது தவிர நீ வேற என்ன பாவம் பண்ண?"


'வா மீரா, நாம இந்த ஊர்ல இருக்க வேணாம்'


"எங்க அப்பவ எதிர்த்திட்டு ஓடிப் போய் வாழ முடியாது கார்த்திக். எப்படியாவது நம்மள தேடிப் பிடிச்சிடுவாங்க. எங்க அப்பா உன்னை உயிரோட விட மாட்டாரு. பெத்த மகளை மட்டும் கொல்ல மனசு வராம என்னை வேற எவனுக்காது கட்டி வச்சிடுவாரு. அவனோட வாழ்ந்திட்டு நான் தினம் தினம் சாகுறதுக்கு ஒரேடியா செத்துப் போறது எனக்கு பிடிச்சிருக்கு. நீ இல்லாம என்னால வாழ முடியாது கார்த்திக்"


'மீரா.... நம்மள ஒன்னா வாழ தான் விடமாட்டாங்க சாக விடுவாங்கல்ல'


"நீ எதுக்கு கார்த்திக்....."


'எப்ப நீ மட்டும் சாகனும்னு முடிவு பண்ணிட்டியோ அப்பவே நானும் முடிவு பண்ணிட்டேன் மீரா'


"கார்த்திக்...."


'நம்மளோட மரணம் ஒரு நாலு பெற்றோர்களையாவது திருத்துனா நம்ம மரணத்திற்கு வெற்றி தான் மீரா'


"இன்னைக்கு எல்லோருக்கும் காதலர் தினம். நம்ம காதலுக்கு மட்டும் நினைவு நாள் கார்த்திக்"


'....'


"கார்த்திக். நாம ரெண்டு பேரும் வாழ, காலமும் இருக்கு காதலும் இருக்கு. ஆனால், நாம தான் வாழாம சாகப் போறோம்"


'அடுத்த ஜென்மத்துல வாழலாம் மீரா'


மறுநாள் எங்கள் காதல் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெறும் செய்தியாய் மற்றும் மாறிப் போனது.கடவுளிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். "அடுத்த பிறவியிலும் நீங்கள் மனிதர்களாகத் தான் பிறக்கப் போகிறீர்கள். உனது ஆசை என்ன? ஒன்றுக்கு மட்டுமே அனுமதி" என்றார் என்னிடம்.

'எல்லோருமே நல்லவங்களா இருக்கிற உலகத்துல எங்க காதல் பிறக்கணும்' என்றேன்.


"எல்லோருமே நல்லவங்களா இருக்கனுமா!!! புரியல தெளிவாகச் சொல்லு" என்றார்.


"இந்த உலகத்துல மனிதர்களுக்குள்ள எந்தப் பிரிவும் இருக்கக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோட உணர்வுகளை மதிக்கணும். பணத்தால நடக்கிற காரியம் எல்லாம் அன்பால நடக்கணும். அப்படி ஒரு உலகத்துல எங்கள் காதல் பிறக்கணும்' என்றேன்.


"உன்னோட ஆசையும் இது தானா மீரா?" என்று கடவுள் வினவ மீரா "ஆமாம்" என்றாள்.கி பி 05-07-3403


கோவை, காலை 10.57

'அங்கிள், நானும் உங்க பொண்ணு மீராவும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம். கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறோம்' என்றேன்.

"மீரா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டா மாப்ள. எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்" - மீராவின் அப்பா, என் மாமா.

'வேலை விஷயமா அமெரிக்காவுக்கு அடுத்த மாசம் போறேன் அங்கிள். அம்மாவும் அப்பாவும் அதுக்கப்புறம் வச்சுக்கலாம்ன்னு சொன்னாங்க'

"சரி மாப்ள. அப்பவே வச்சுக்கலாம். முதல் முறை நம்ம வீட்டுக்கு மாப்ள வந்திருக்காரு போய் குடிக்க ஏதாச்சும் எடுத்திட்டு வா மீரா"

"கார்த்திக் நீ தான் நல்லா காபி போடுவல்ல. உனக்கு போட்டுட்டு எனக்கும் சேர்த்து ஒரு கப் எடுத்திட்டு வர்றியா? கிச்சன் வலது பக்கம் இருக்கு" என்றாள் மீரா.

'கல்யாணத்துக்கு முன்னாடியும் நான் தான் சமையலா????' என்று நான் சொல்ல மாமா புன்னகைத்தார்.

'சரி மாமா நான் கிளம்புறேன். நீங்க, மீரா, அத்தை எல்லாரும் கண்டிப்பா சென்னைல எங்க வீட்டுக்கு வரணும் நான் வெளிநாடு கிளம்புறதுக்குள்ள' என்றேன்.

"கண்டிப்பா மாப்ள" என்றார்.

அவரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தேன்.

"கார்த்திக்"

'சொல்லு டி'

"கண்டிப்பா நீ இந்த onsite ட்ரிப் போனுமா"

'நான் ஆசைப்பட்டா போறேன். உனக்கே தெரியும்ல நான் ஏன் இப்ப போறேன்னு! நம்ம நாட்டை விட்டுப் போறதுக்கு யாரும் ஆசைப்படுறது இல்லை. செந்தில் போய் இரண்டு வருஷம் முடியப் போகுது. அவனும் ஒரு வருஷமா இந்தியா வரணும்ன்னு புலம்பிட்டே இருக்கான். நாம டீம் மீட்டிங்ல முடிவு பண்ண படி ஆறு மாசத்துக்கு மட்டும் தான் இனிமேல onsite ல இருக்கணும். அதுக்கப்புறம் போகத் தேவை இல்லை. நான் இப்ப போயிட்டு வந்திட்டா இனிமேல் உன்னை எப்பவும் பிரியப் போறது இல்லைல'

"புரியுது டா. ஆனாலும் உன்னைய பிரிஞ்சு ஆறு மாசம் எப்படி இருக்கிறது?"

'எப்ப ஆறு மாசம் முடியும்னு நாம ரெண்டு பேரும் காத்துக்கிட்டு இருக்கப் போறோம். காதல்ல காத்திருப்பும் ஒரு சுகம் தான'

"போடா.. எனக்கு கோபமா வருது. பேசுறதுக்கு தான் அது எல்லாம் நல்லா இருக்கும். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா"

'எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா'

"போஜனம் சேஸேஸி போன் மாட்லாடு" என்று அம்மா குரல் கேட்டது. "அம்மா ஏதோ சொல்றாங்க டா" என்றாள். 'ஐது நிமிஷன்லோ ஒஸ்துன்னா மா ' என்று அம்மாவிற்கு பதில் அளித்துவிட்டு' சாப்பிட்டு போன் பேச சொல்றாங்க டி' என்றேன் மீராவிடம்.

"கார்த்திக், வீட்ல எப்பவும் தெலுங்குல தான் பேசுவீங்களா"

'அப்படி எல்லாம் இல்லை டி. வீட்ல நான் மட்டும் இருந்த அம்மா தெலுங்குல பேசுவாங்க.தமிழ் அம்மாவுக்கு அவ்வளவு வேகமா பேசத் தெரியாது'

"நானும் தெலுங்கு கத்துக்கணும் டா. அப்ப தான் அம்மாவுக்கு என்னை சீக்கிரமா பிடிக்கும்"

'இதையே தான் அம்மாவும் சொன்னாங்க. தமிழ் நல்லா பேசக் கத்துக்கணும் அப்ப தான் மருமகள்ட்ட நிறைய பேச முடியும்னு'

"நீ தான் தெலுங்கு சொல்லிக் கொடுக்கனும் கார்த்திக்"

'அம்மா என்னன்னா தமிழ் சொல்லித்தான்னு சொல்றாங்க நீ தெலுங்கு. நடுவுல நான் தான் மாட்டிக்கிட்டேன்'

சிரித்தாள்.

"சரி கார்த்திக் சாப்பிட போ. நானும் சாப்பிட்டு நைட் கால் பண்றேன்"

இருவரும் அழைப்பை துண்டித்தோம்.


அடுத்த வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணி:
"கார்த்திக் யாரு வந்திருக்கான்னு பாரு" - அம்மா

'யாரும்மா?'

'ஹே மீரா நீ இங்க.. என்கிட்ட கூட சொல்லாம திடீர்னு வந்திருக்க. ஊருக்கு போறேன்னு சொன்ன?'

"சேரன் எக்ஸ்பிரஸ் 10.10 க்கு தான் கார்த்திக். அதுக்கு முன்னால உன்னையும் அம்மாவையும் பார்த்துட்டு போலாம்னு தான்"

'இப்பவே மாமியாருக்கு ஐஸ் வைக்கிறியா?'

அம்மா எங்கள் இருவரின் ஜோடிப் பொருத்தத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். "நீங்க பேசிட்டு இருங்க நான் போய் சாப்பாடு ரெடி பண்றேன் நைட்டுக்கு" என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தார்கள்.

"கார்த்திக் நான் தெலுங்கு கத்துக்கிட்டு வர்றேன். நீ ஏதாச்சும் சொல்லு நான் அதை தெலுங்கு ல சொல்றேன்"

'"கார்த்திக், எனக்கு ஒரு கிஸ் வேணும்" இதை தெலுங்கு ல சொல்லு. தெலுங்கு ல தான் சொல்லனும்னு இல்ல. நீ உனக்கு தெரிஞ்ச எந்த மொழியிலனாலும் சொல்லு நான் பதில் சொல்லுவேன் பாரேன்'

"உனக்கு.... இரு அம்மாகிட்ட சொல்றேன். அம்மா...." என்று மீரா எனக்கே கேட்காதவாறு அம்மாவை கூப்பிட்டாள்.

'என்ன மீரா, அம்மாவை கூப்பிட பயமா இருக்கா. இரு நானே கூப்பிடுறேன்' என்று நான் வாயைத் திறக்க நொடிப்பொழுதில் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து விட்டு ஓடிப் போய் நல்ல பிள்ளையாய் அவளிடத்தில் அமர்ந்திருந்தாள்.

"அம்மாவை இப்ப கூப்பிடு கார்த்திக்" என்றாள்.

'அம்மா....' எனக்கு வெறும் காற்று தான் வந்தது.

"கார்த்திக், வேற கேளு"

நான் மறு கன்னத்தை காண்பித்தேன்.

"ஐயோ கார்த்திக் இன்னைக்கு ஒன்னு போதும், தமிழ்ல நீ ஏதாச்சும் சொல்லு நான் தெலுங்கு ல சொல்றேன். கொஞ்சம் ஈஸியா சொல்லு"

'ஓ அதுவா..' சிறிது நேரம் யோசித்தேன் 'என்னை ஹாலுக்கு போகச் சொல்லு தெலுங்குல'

ஐந்து நிமிடம் யோசித்தாள்.

'என்ன டி ஊருக்கு போயிட்டு வந்து சொல்லிடுவியா?'

சிரித்தாள். எழுந்து ஹாலுக்குச் சென்றாள்.

'எங்க டி அங்க போற?'

"இக்கட ரா கார்த்திக்" என்றாள்

'அடிப்பாவி "என்னை ஹாலுக்கு போ" ன்னு சொல்லச் சொன்னா ஹால்ல போய் நின்னுட்டு "இங்க வா" அப்படின்னு சொல்ற. இப்படியே போச்சுன்னா இன்னும் ஒரு இருபதே வருசத்துல நீ தெலுங்கு கத்துக்கிடலாம்'

"போ லூசு" சிணுங்கினாள்.

"சாப்பிட வாங்க ரெண்டு பேரும்" என்று அழைத்தாள் அம்மா. மூவரும் சாப்பிட்டு முடித்தோம்.

'அம்மா, நான் போய் மீராவை ஸ்டேஷன்ல விட்டுட்டு வந்திடுறேன்'

"சரி டா. பார்த்து பத்திரமா போங்க. அவளை விட்டுட்டு உன் பிரண்ட்ஸ் வீடுன்னு சுத்திட்டு இருக்காத. வீட்டுக்கு வரணும்"

'சரிம்மா'

"சரி அத்தை நான் போயிட்டு வர்றேன்"

"சரி மீரா. அம்மா அப்பாவை ரொம்ப கேட்டதா சொல்லு"

'மீரா பைக்கா?? காரா??' என்று நான் கேட்க "எப்படி நல்லவன் மாதிரி கேட்குறான். கார்லயே போலாம் கார்த்திக்" என்றாள் மீரா.

நானும் மீராவும் பைக்கில் கிளம்பினோம். என் தோள்களை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.

"கார்த்திக், நான் ஊருக்கு போனுமா?"

'சரி போலையா. உன்னை ஹாஸ்டல்ல விட்டுடுறேன்'

"என்னைய ஸ்டேஷன்ல விட்டுட்டு போயிடாத கார்த்திக். என் கூடவே இரு"

'சரி உன்னோடவே இருக்கேன். உன்னைய தனியா விட்டுட்டு போகல'

இருவரும் பேசிக்கொண்டே சென்றோம். கார்த்திக் அம்மா கால் பண்றாங்க என்று போனை எடுத்தவள் அப்பொழுது தான் மணியைப் பார்த்தாள்.

"டேய் மணி 11 டா. இன்னுமா நாம ஸ்டேஷன் போய் சேரல. எங்க டா போயிட்டு இருக்கோம்? முதல்ல அம்மாகிட்ட பேசு. அப்புறம் கவனிச்சுகிறேன் உன்னை"

"கார்த்திக் எங்க டா இருக்க. இன்னும் வீட்டுக்கு வரலை" - அம்மா

'இல்லம்மா. மீரா தனியா ஊருக்கு போகப் பயந்தா. அதான் நானும்....'

"அவா கூடவே சேரன்ல ஏறிட்டியா????"

'இல்லம்மா. கோயம்பத்தூர்ல போய் அவளை விட்டுட்டு வந்திடுறேன் மா பைக்கில'

"கார்த்திக்!!!! உங்க அப்பா வரட்டும். அவர்ட்ட பேசிக்கிறேன்"

'என் செல்ல அம்மால்ல. கோச்சுக்காதம்மா. நாளைக்கு சாயந்திரம் வந்திடுவேன். எனக்கு பிடிச்ச மீன் குழம்பு பண்ணி வச்சிடு'

"உன்னைய ஒன்னும் சொல்றதுக்கில்ல. உங்க அப்பாகிட்ட பேசிக்கிறேன். என் மருமகளை பத்திரமா கூட்டிட்டு போடா" போனை கட் செய்தாள்.

"ஏன் கார்த்திக் என்னைய கோயம்பத்தூர் வரை விட வர்ற? என்னைய உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கா கார்த்திக்"

'இல்லடி உன் தங்கச்சிய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அதான் பாத்துட்டு போலாம்னு'

"போடா எவ்வளோ பீல் பண்ணி கேட்டேன். எல்லாம் போச்சு" கோபித்துக் கொண்டாள்

'அவ்வளவு தூரம் வர்றேனே எனக்கு எதுவும் கிடையாதா?'

"என் தங்கச்சிய தான பார்க்க வர்ற அவகிட்டயே வாங்கிக்கோ"

'சரி' என்று மட்டும் சொல்லிவிட்டு அதன்பின் ஏதும் பேசவில்லை. NH 45ல் 100 KMPH இல் பைக் சென்று கொண்டிருந்தது.

"சாருக்கு கோபம் வந்திடுச்சு போல"

நான் எதுவும் பேசவில்லை.

"கார்த்திக், நீ வீட்ல கேட்டல்ல. அதை இப்ப தெலுங்குல சொல்ல ட்ரை பண்றேன். கரெக்டான்னு சொல்றியா?"

'ஹ்ம்ம்.... அந்த ஹாலுக்கு போ தான....சொல்லு'


"கார்த்திக் நாக்கு ஒக்க முத்து காவாளி"

'என்னது! வீட்ல மட்டும் தெரியாத மாதிரி நடிச்ச'

"அம்மா இருந்தாங்க. அதான்"

'அப்ப....'

பைக்கை நிறுத்தினேன்.

"கார்த்திக் நான் ஒன்னு தான் கேட்டேன் இதோட முப்பத்தி நாலு ஆச்சு"

'இதை ரெண்டாவது கொடுக்கும் போதே நீ சொல்லி இருக்கலாம்ல'

"...."

'ஆனாலும் டி, எது முக்கியமோ அதை எல்லாம் சீக்கிரமா தெலுங்கில கத்துக்கிட்ட'

"சீ போடா லூசு.." அந்த நிலவொளியில் அவள் வெட்கம் நட்சத்திரமாய் மின்னியது.

காலை ஆறு மணி. கோயம்பத்தூர் வந்து சேர்ந்தோம். சேரன் வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது.

'உங்க அப்பா ஸ்டேஷன்க்கு வெளிய தான நிப்பாரு?'

"ஆமா கார்த்திக். நீ வீட்டுக்கு வாயேன்"

'இல்லடி சேரன் வந்ததும் நான் கிளம்புறேன். நீ ரயில்ல வந்ததாகவே இருக்கட்டும். மாமாட்ட கல்யாணத்துக்கு அப்புறமா இந்த உண்மைய சொல்லிக்கலாம்'

"கார்த்திக். ஒரு கன்னத்துல கொடுத்தா இன்னொரு கன்னத்துலயும் கொடுக்கணும்னு எங்கேயோ படிச்சு இருக்கேன்....அதனால"

'அதனால'

"அதனால"

'ரயில்வே ஸ்டேஷன் டி'

"என் புருசனுக்கு நான் கொடுக்கிறேன்"

....

'ஆனாலும்.... சரியான fraud டி நீ. பார்க்க மட்டும் ரொம்ப அமைதியா சாதுவான பொண்ணு மாதிரி முகத்தை வச்சுக்கோ'

"என்னைய ஆறு மாசம் தனியா விட்டுட்டு போறல்ல அதுக்குத் தான் இந்த முத்த தண்டனை"

அவள் சொல்லி முடிப்பதற்கும் சேரன் எக்ஸ்பிரஸ் தடம் ஒன்றில் வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது.

'நான் இந்த சன்டே கிளம்புறேன் டி US க்கு'

"நீயேன் இதை முன்னாலேயே சொல்லலை. நான் send off பண்ண சென்னைலயே இருந்து இருப்பேன்ல. ஏன்டா இப்படி பண்ண"

'நீ அழுறதை என்னால தாங்கிக்க முடியாது மா. அதான் சொல்லலை. நீ ரொம்ப கஷ்டப்படுவ. அம்மா அப்பா கூட இருந்தா கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவ. அதான்'

"போ லூசு. எத்தனை மணிக்கு பிளைட்?"

'நாளைக்கு அதிகாலை நாலு மணிக்கு டா. நான் போய் சேர்ந்ததும் உனக்கு தான் முதல்ல போன் பண்ணுவேன். சரியா? என் புஜ்ஜு குட்டில கொஞ்சம் சிரிமா. ப்ளீஸ்'

எனக்காகச் சிரித்தாள்.

'சரி டி. நான் கிளம்புறேன். நீ உடம்பை பார்த்துக்கோ. அடிக்கடி வீட்டுக்கு போ. உன் அத்தையை கவனிச்சுக்கோ. அப்பா ஆபீஸ் ட்ரிப் ன்னு போயிடுறாரு. அம்மா தனியா இருப்பாங்க"

"நான் பாத்துக்கிறேன் டா. நீ பத்திரமா போயிட்டு வா. இருந்தாலும் நாளைக்கு உன்னை send off பண்ண நான் இல்லைன்னு கஷ்டமா இருக்கு டா"

'ப்ளீஸ் மா. ஆறு மாசம் சீக்கிரமா முடிஞ்சிடும். பிப்ரவரி 14 நான் உன்னை பார்க்க வரப் போறேன். இப்ப இருந்தே நாட்களை எண்ண ஆரம்பிச்சிட்டேன்'

பிரிய மனமில்லாமல் இருவரும் பிரிந்தோம். மீராவையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவள் கண்கள் கலங்கி இருந்தன. என் கண்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன????

US போய் சேர்ந்ததும் மீராவுக்கு போன் செய்தேன். 'என்ன டி இன்னும் உறங்காம இருக்க?'

"நான் இப்ப தான் டா வேலைக்கு வந்தேன்"


'என்ன டி சொல்ற?'


"ஆமா கார்த்திக், நான் இந்தியா டைம் ல வொர்க் பண்ணா உன்னோட நல்லா பேச முடியாது. அதான் நைட் ஷிப்ட் கேட்டு வாங்கிட்டேன் இந்த ஆறு மாசத்துக்கு. நீ வேலை பார்க்கிற நேரம் நானும் வேலைல இருப்பேன். அப்ப தான் மத்த நேரம் உங்கிட்ட நிம்மதியா பேச முடியும்"


'உன் உடம்புக்கு ஏதாச்சும் ஆகிடப் போது டி நைட் ஷிப்ட் வர்றதுனால'


"அதெல்லாம் ஒன்னு ஆகாது டா. நீ இருக்கல்ல என்னைப் பார்த்துக்க" சிரித்தாள்.


'உனக்கு ஏதாச்சும் ஒன்னுன்னா நான் இங்க ரொம்ப துடிச்சுப் போயிடுவேன் டி. நான் உன் பக்கத்துலயும் இல்ல. ஒரு வாரம் வந்து பாரு உடம்பு ஒத்து வரலைன்னா நார்மல் டைமிங் ல வரனும். சரியா?'


"சரிங்க புருஷா"


இருவரின் வேலைப் பளுவும் அதிகமாகிக் கொண்டே சென்றது. நாட்கள் போகப் போக மீரா என்னோடு பேசுவது குறைந்தது. தினமும் ஒரு மின்னஞ்சலாவது அனுப்பியவள், மெயில் அனுப்புவதையும் நிறுத்தி இருந்தாள்.


'ஏன் மீரா, இப்பொழுதெல்லாம் நீ சரியாகப் பேசுறதே இல்லை? உன் உடம்புக்கு எதுவும் இல்லைல? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?'


"எல்லாரும் நல்லா இருக்காங்க டா. உனக்கு வேலை ரொம்ப அதிகமாயிடுச்சுன்னு மேனேஜர் சொல்லிட்டு இருந்தாரு. வேலை முடியலன்னா நீ வர்றது லேட் ஆனாலும் ஆயிடும்னு சொன்னாரு. நீ சீக்கிரம் இந்தியா வரனும்ல. அதனால தான் என் காதலை சேர்த்து வச்சு உன்கிட்ட மொத்தமா காட்டுற நாளுக்காக காத்துக்கிட்டு இருக்கேன் டா. அந்த நாள் எப்ப வரும்ன்னு தான் தெரியலை"


'பிப்ரவரி ல தான் நான் வர்றேன் ல....'


"பிப்ரவரி ல நீ என்னை பார்க்க வருவல்ல?"


'என்னடி என்னமோ மாதிரி பேசிட்டு இருக்க? உனக்கு என்ன ஆச்சு? நான் சொன்ன மாதிரி பிப்ரவரி ல வருவேன் என் செல்லத்தை பார்க்க'


"வராம இருந்திடாத டா. உனக்காக நான் எப்பவும் காத்துக்கிட்டு இருப்பேன்"


'நானும் தான் டி. உன் கை பிடிக்கப் போற நாளுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்'


சிரித்தாள்.


நாட்கள் மிகவும் மெதுவாகச் சென்றன. ஒரு வழியாக இந்தியா செல்லும் நாளும் வந்தது.


கி பி 14-02-3404

காலை 6 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தேன்.


"கார்த்திக், மீரா இதை உங்கிட்ட கொடுக்கச் சொன்னா" என்று ஒரு லெட்டரை என்னிடம் கொடுத்தாள் அம்மா.


"என் காதலுக்கு,


வந்திட்டியா கார்த்திக்? உன்கிட்ட இருந்து நான் ஒரு உண்மைய மறைச்சிட்டேன். US போறதை என்கிட்ட மறைச்சல்ல எனக்கு தெரிஞ்சா கஷ்டப்படுவேன்னு நானும் அதையே தான் டா பண்ணேன் நீ கஷ்டப் படக்கூடாதுன்னு. தப்பா? நான் உன்னை விட்டு நிரந்தரமா போகப் போறேன். ஒரு விதத்துல நீ இங்க இல்லாததும் நல்லது தான் டா. இங்க இருந்திருந்தா என்னைப் பார்க்கும் போதெல்லாம் நான் சாகப் போறேங்கிற நினைப்பு தான் உனக்கு இருந்திட்டே இருந்திருக்கும். என் செல்லத்துக்கு எப்பவும் என்னோட சிரிச்ச முகம் மட்டும் தான் ஞாபகம் இருக்கணும். நம்ம கல்யாணத்துக்கு தான் நாள் குறிப்பாங்கன்னு நினைச்சேன் ஆனால் என் சாவுக்கு நாள் குறிச்சிட்டாங்க. எனக்கு blood cancer இருக்காம். இருந்தாலும் நான் அதிர்ஷ்டக்காரி டா. உன் காதல் எனக்கு கிடைத்த காதலர் தினம் அன்னைக்கு தான் என்னோட நினைவு நாள். நான் என்ன டா பாவம் செய்தேன்? உன்கூட வாழணும்ன்னு அவ்வளவு ஆசையா இருக்கு. ஆனால், எனக்கு வாழ்றதுக்கு காலம் இல்லாம போச்சு டா. ஒரு நாளாவது உன் பொண்டாட்டியா வாழுற பாக்கியம் கூட எனக்கு கிடைக்கலைடா. என்னைப் பார்க்க வர வேணாம் கார்த்திக். நீ அழுதா என்னால தாங்கிக்க முடியாது டா.


இ ஜென்மன்லோ நீத்தோ லேனா ரோஜுலு அண்ணி சேர்ச்சி ஒச்சே ஜென்மன்லோ நீத்தோ நா ஜீவிதம் உண்டலாணி ஆஷிஷ்துன்னான்னு... நீ செய் பேட்டே தினானிக்காக காசுகொனி உன்னானு.....


தெலுங்கு கரெக்டா பேசுறேனா?

முத்தங்களுடன்

உன் காதல்,
மீரா"

'இந்த ஜென்மத்தில் உன்னுடன் வாழாத நாட்களை எல்லாம் சேர்த்து இனிவரும் ஜென்மங்களில் வாழ வேண்டும். உன் கை கோர்க்கப் போகும் நாளுக்காக காத்துக் கொண்டிருப்பேன்" என்பதை தெலுங்கில் எழுதி இருந்தாள் மீரா.

என் மீராவைப் பார்க்க புறப்பட்டேன். உலகமே எனக்கு இருட்டானது.இதோ மீண்டும் என் பக்கத்தில் என் மீரா. "அடுத்த பிறவியிலும் நீங்கள் மனிதர்களாகத் தான் பிறக்கப் போகிறீர்கள். உங்கள் ஆசை என்ன?" - எங்களிடம் கேட்டார் கடவுள்.

எங்கள் இருவரின் காதலுக்கு மட்டும் கிடைத்த வரமா சாபமா என்று தெரியவில்லை....

22 comments:

MANO நாஞ்சில் மனோ said...

நல்லாயிருக்கு....

inthu said...

கண் கலங்க வச்சுடீங்களே சகோ .... பிரிவின் வலி நானும் அறிவேன் ... உணர்கிறேன் இந்த வரிகளில் ... ரொம்ப நல்ல இருக்கு :)

Priya said...

"இந்த ஜென்மத்தில் உன்னுடன் வாழாத நாட்களை எல்லாம் சேர்த்து இனிவரும் ஜென்மங்களில் வாழ வேண்டும். உன் கை கோர்க்கப் போகும் நாளுக்காக காத்துக் கொண்டிருப்பேன்"

nice lines.. tears was waiting to come out.. last paragraph made it.. hats off...

எவனோ ஒருவன் said...

@ Priya

உனக்கு தான் முதல்ல என்னோட நன்றிகளைச் சொல்ல வேண்டும். எனக்கு தெலுங்கு சொல்லித் தர்ற குரு நீ தான :-)

எவனோ ஒருவன் said...

@ MANO நாஞ்சில் மனோ

மிக்க நன்றி மனோ....

எவனோ ஒருவன் said...

////inthu said...

கண் கலங்க வச்சுடீங்களே சகோ .... பிரிவின் வலி நானும் அறிவேன் ... உணர்கிறேன் இந்த வரிகளில் ... ரொம்ப நல்ல இருக்கு :)////

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல சகோ. பிரிவின் வலியை நாம் மட்டும் உணர்ந்து எந்த மாற்றமும் இவ்வுலகில் நிகழப் போவது இல்லை சகோ. காதலை எதிர்ப்பவர்களும், பெற்றோருக்காக காதலை வேண்டாம் என்று முடிவேடுப்பவர்களும் இக்கொடுமையான வலியை உணர வேண்டும். அப்படி நடந்திருந்தால் பல உண்மைக் காதலின் முடிவு மாறி இருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து....

Ramani said...

இயல்பான நடை .ரசித்துப் படிக்க முடிந்தது
.நல்ல பதிவு வாழ்த்துக்கள்

siva said...

ம் நல்லா இருக்கு

ஜெ.ஜெ said...

அடிக்கடி கண் கலங்க வைக்கிறீங்க அண்ணா :(

ஜெ.ஜெ said...

வாழ்வில் ஒன்று சேருவதை விட்டு விட்டு சாக நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்...

ஜெ.ஜெ said...

அடுத்த கதை யோசிச்சிட்டீங்களா??

ரேவா said...

பிரிவின் வலி நானும் அறிவேன் ... உணர்கிறேன் இந்த வரிகளில் ... ரொம்ப நல்ல இருக்கு

பிரிவின் வலியை நாம் மட்டும் உணர்ந்து எந்த மாற்றமும் இவ்வுலகில் நிகழப் போவது இல்லை சகோ. காதலை எதிர்ப்பவர்களும், பெற்றோருக்காக காதலை வேண்டாம் என்று முடிவேடுப்பவர்களும் இக்கொடுமையான வலியை உணர வேண்டும். அப்படி நடந்திருந்தால் பல உண்மைக் காதலின் முடிவு மாறி இருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

unmaithaan nanba

logu.. said...

Super bossuu...

Kathai arumaiyaga ullathu.
pinreenga..

( enakkum telugu theriumeeyyy...)

Priya said...

guru va.. nana.. po po.. en guruvae unoda kavithaikum kadhaigalukum munadi nan ellam chuma..

the comment u gave about the pain s very true..
so before taking a decision just think of how s it gonna hurt the person who loves us..

எவனோ ஒருவன் said...

@ Ramani

கருத்துக்கு மிக்க நன்றி....

எவனோ ஒருவன் said...

@ siva

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....

எவனோ ஒருவன் said...

@ ஜெ.ஜெ

உங்க அளவுக்கு என்னால தினமும் ஒரு பதிவு போட முடியாது. நான் ஒரு மாசத்துக்கு யோசிச்சா தான் ஒன்னாவது எழுத முடியும் :-)

எவனோ ஒருவன் said...

////ரேவா said...

பிரிவின் வலி நானும் அறிவேன் ... உணர்கிறேன் இந்த வரிகளில் ... ரொம்ப நல்ல இருக்கு

பிரிவின் வலியை நாம் மட்டும் உணர்ந்து எந்த மாற்றமும் இவ்வுலகில் நிகழப் போவது இல்லை சகோ. காதலை எதிர்ப்பவர்களும், பெற்றோருக்காக காதலை வேண்டாம் என்று முடிவேடுப்பவர்களும் இக்கொடுமையான வலியை உணர வேண்டும். அப்படி நடந்திருந்தால் பல உண்மைக் காதலின் முடிவு மாறி இருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

unmaithaan nanba////


@ ரேவா

நன்றி தோழி....

எவனோ ஒருவன் said...

@ logu..

ரொம்ப நன்றி நண்பா....

inthu said...

//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல சகோ. பிரிவின் வலியை நாம் மட்டும் உணர்ந்து எந்த மாற்றமும் இவ்வுலகில் நிகழப் போவது இல்லை சகோ. காதலை எதிர்ப்பவர்களும், பெற்றோருக்காக காதலை வேண்டாம் என்று முடிவேடுப்பவர்களும் இக்கொடுமையான வலியை உணர வேண்டும். அப்படி நடந்திருந்தால் பல உண்மைக் காதலின் முடிவு மாறி இருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.... //

உண்மை தான் சகோ இங்கு பல காதலின் முடிவுக்கு துணிச்சல் அற்ற காதலர்களே காரணமாகி விடுகிறார்களே ...இனியேனும் காதலின் ஆழமறிந்த சமுதாயம் உருவாக வேண்டிக்கொள்வோம் ....

keerthi said...

Its really very touching. It made my heart heavy.. U have a gr8 talent continue ur good work :).. All the best...

எவனோ ஒருவன் said...

@ keerthi

மிக்க நன்றி கீர்த்தி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்....

Post a Comment