Pages

Friday, February 25, 2011

பெங்களூர் - சென்னை. என் முதல் பயணம் (கிறுக்கல்கள்)

இது கதையோ, கட்டுரையோ அல்ல. என் வாழ்வில் நடக்கும், நடக்கப் போகும் சில முக்கிய நிகழ்வுகளையும் இனி கிறுக்கலாம் என்று என் மனம் முடிவு செய்துள்ளது. எனவே கிறுக்க ஆரம்பிக்கிறேன் 'கிறுக்கல்கள்' என்ற உப தலைப்பில்.

இதைப் படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கருதுபவர்கள் இதோடு நிறுத்திக் கொண்டு தங்களுக்குப் பிடித்த வேலைகளை செய்யத் தொடங்கலாம். ஒரு சின்ன அறிவுரை "நேரம் பொன் போன்றது" என்பதால்.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு முதன் முதலில் பயணம் செய்யப் போகிறேன். இவன் பொய் சொல்கிறான் பெங்களூரில் இருந்து சென்னைக்கு இவன் பல முறை சென்றுள்ளான் என்று என் நெருங்கிய நண்பர்கள் உண்மை பேசாலாம். ஆனால் நான் சொல்வதும் முற்றிலும் உண்மை. இன்று நான் செல்லும் பயணம் முற்றிலும் எனக்கு புதிதானது. எனவே என் முதல் பயணம் என்று குறிப்பிட்டேன். நிறைய புதிர் போட்டு குழப்புறானே என்று என்னைத் திட்ட வேண்டாம். 'பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு போல என்று வடிவேலு ஸ்டைலில் காமெடியும் செய்ய வேண்டாம். நானே சொல்லி விடுகிறேன் முதன் முதலாக பெங்களூரில் இருந்து சென்னைக்கு என் பைக்கில் செல்கிறேன்.

இதற்கு தான் இந்த பில்டப் கொடுத்தானா என்று நினைக்கிறீர்களா? ஆசை, கனவுகள் என்று இப்பொழுதெல்லாம் அதிகம் எதையும் என் மனதினுள் வைத்துக் கொள்வதில்லை. நானா விரும்பி எதையும் வாங்கவும் மாட்டேன். ஆனால், சமீபத்தில் நான் காத்திருந்து வாங்கியது என்னுடைய Honda Unicorn. பாவம் என் உடல் சுமையை சுமப்பது மட்டுமின்றி என் மனச் சுமையையும் இரண்டரை மாதங்களாக சுமக்க ஆரம்பித்திருக்கிறது அந்த ஜீவன் எனக்கு பைக்காக வாக்கப்பட்டதால்.

என்னுடன் என் கல்லூரி நண்பன் ஷங்கரும் வருகிறான். வேலை இருக்கிறது, அது இது என்று என்னன்னமோ காரணம் சொல்லி என்னிடம் இருந்து தப்பிக்கலாம் என்று பார்த்தான். ஆனால் நான் அவனை விடுவதாய் இல்லை. மற்ற ஊர்களுக்கு நான் இவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் செல்ல மாட்டேன். ஏன், என் பிறந்த ஊருக்குக் கூட. சென்னை - A special place to me. கண்டிப்பாக ஏன் என்று தெரிந்திருக்கும் நான் வேற சொல்ல வேண்டுமா!

என் கல்லூரி நண்பர்கள் எத்தனையோ முறை சென்னை வரும் படி அழைத்த போதும் 'Chennai - Its too hot man!' என்று பீட்டர் விடுவது என் வழக்கம். இவன் என்ன சுவிஸ்லையா பொறந்தான் என்று சென்னை நண்பர்கள் என்னைத் திட்டாதீர்கள். என் கல்லூரி நண்பர்களிடம் ஏற்கனவே நிறைய வாங்கி கட்டிகொண்டேன். அவள் என் வாழ்வில் வரும் வரை சென்னை எனக்கு பிடிக்காத ஊராகத் தான் இருந்தது. இப்பொழுதெல்லாம் என் நண்பர்கள் அழைக்காமலே சென்னைக்கு செல்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் இரண்டாமிடம் சென்னைக்கு. முதல் இடம் அவள் பிறந்த ஊர் ஆயிற்றே :-)

அவளைப் பார்க்க சென்னைக்கு பைக்கில் செல்ல வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக இருக்கும். ஆனால் அப்பொழுது பைக் என்னிடம் இல்லை. இதை ஆசை என்று கூட சொல்ல முடியாது பேராசை என்று தான் நான் சொல்லுவேன். ஏனென்றால் எனக்கு அப்பொழுது பைக் ஓட்டத் தெரியாதே. அவளை எப்படியாவது என் பின்னால் உட்கார வைத்து ஒரு 100 மீட்டர் தூரமாவது போக வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை காரணமாகத் தான் கல்லூரி நண்பர்களிடம் இரவல் வாங்கி பைக் ஓட்ட கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இப்பொழுது பைக்கும் வாங்கி விட்டேன். என்ன?, என் பைக் கொடுத்து வைக்கவில்லை அந்த தேவதையை ஏற்றிக் கொண்டு உலா வர.

சென்னையில் சில நண்பர்களை சந்திக்கப் போகிறேன். வேறு எங்கு செல்லலாம் என்று இதுவரை முடிவு செய்யவில்லை. கண்டிப்பாக வடபழனி முருகன் கோவிலுக்குச் செல்லுவேன். சாமி கும்பிடுவதை நிறுத்திவிட்டேன் பல மாதங்களாக. இருந்தாலும் கோவில் வாசல் வரை சென்று முருகனை திட்டி விட்டு வருவேன். கோபத்தை யாரிடமும் காட்ட முடியவில்லை. கடவுளிடம் மட்டும் தானே காட்ட முடிகிறது.

பெங்களூர் - சென்னை பைக் பயணத்தை வைத்து ஏற்கனவே ஒரு கதை கூட எழுதி இருக்கிறேன். இங்கே படித்துப் பாருங்கள். இன்று நிஜமாகவே டீமிற்கு மெயில் அனுப்பப் போகிறேன் "Will be leaving by 1.30 today" என்று. ஒரே ஒரு வித்தியாசம் அந்தப் பதிவை எழுதும் போது இருந்த சந்தோஷம் இன்று இப்பொழுது மெயில் அனுப்பும் போது இருக்காது.

என் முதல் பயண அனுபவத்தை திரும்பி வந்து கிறுக்குகிறேன்.

Tata :-)

Monday, February 14, 2011

அனாதை

என் காதலை
அனாதை
ஆக்கிவிடாதே!
அந்த ஜீவனுக்கு

சொந்தம் என்று
சொல்லிக் கொள்ள
யாரும் இல்லை
உன்னைத் தவிர....