உன்னைப் பாக்கணும் போல இருக்கு டா. பெங்களூர் வாடா நாளைக்கு எனக்காக என்றாள்.
சாரிடி, நாளைக்குச் சென்னைல IPL மேட்ச் இருக்கு நான் என் ப்ரெண்ட்ஸ் கூட சேப்பாக்கம் போறேன். என்னால வர முடியாது. நான் அடுத்த வாரம் கண்டிப்பா வர்றேன்டி என்றேன்.
என்னை விட உனக்கு கிரிக்கெட் முக்கியமா போயிடுச்சில்ல?? என்றாள் கோபமாக.
இப்படி எல்லாம் கேட்டா நான் உண்மையா சொல்ல வேண்டி வரும், உன் முகம் சிவந்திடும் என்றேன்.
நீ ஒன்னும் சொல்ல வேணாம், நீ கிரிக்கெட் மேட்ச் போறதா முடிவு பண்ணதுல இருந்தே எனக்கு தெரிஞ்சு போச்சு உன்னோட பதில் என்னவா இருக்கும்னு. நீ வேற சொல்லி ஹர்ட் பண்ணாத ப்ளீஸ். என்னமோ பண்ணு. நான் கட் பண்றேன் என்றாள் கோபமாக.
இப்ப ஏன்டி சண்டை போட்டுட்டு இருக்க. இங்க பாரு இன்னைக்கு நான் ரொம்ப பிஸி. Presentation இருக்கு, முடிய 9 மணி ஆயிடும். அது வரை பேச முடியாது பாத்துக்கோ என்றேன்.
Presentation ஏதாச்சும் பொண்ணு கொடுக்குதா? இது வரை வாழ்க்கைல நீ Presentationக்கு போனதே இல்லையே. யார் கொடுத்தா எனக்கென்ன. எங்கனாலும் போ எப்படினாலும் இரு. நான் இனி கால் பண்ணப் போறது இல்ல. நான் உனக்கு முக்கியம் இல்லைல அப்புறம் என்ன? என்று கடுப்புடன் பேசிவிட்டு கட் செய்தாள்.
அவளுடன் பேசி முடித்துவிட்டு டீமிற்கு ஒரு மெயில் அனுப்பினேன் "Will be leaving by 3 today
மதியம் உணவு முடித்துவிட்டு பெங்களுர்க்கு பைக்கில் புறப்பட்டேன். கயல், நாளைக்கு உன் பிறந்தநாள். நான் உன்னைப் பாக்க வராம எப்படிடி இருப்பேன். அதுவும் முதல் தடவையா உன் வீட்டுக்கு போகாம பெங்களுர்ல இருக்க எனக்காக. அது என்னன்னு தெரியலடி உன்னைக் கோபப்படுத்தி பார்க்கிறதுல எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் என்று எனக்குள் பேசிக் கொண்டே பைக்கை செலுத்தினேன்.
அவளிடம் இருந்து calls, messages என்று வந்து கொண்டே இருந்தது. "சாரிடா உன்னைத் திட்டுனதுக்கு, கோபத்துல பேசிட்டேன். நீ மேட்ச் பாத்து என்ஜாய் பண்ணு. டைம் கிடைச்சா என்கிட்ட பேசு. அது போதும்" என்றும் அனுப்பி இருந்தாள். அவளுடன் அப்போதே பேச வேண்டும் போல இருந்தது. ஆனால் நான் பயணத்தில் இருப்பது தெரிந்து விடுமே என்று பேசவில்லை. Message மட்டும் அனுப்பினேன் session முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிடுவேன். டிவில IPL மேட்ச் முடிஞ்சதும் நைட் 11.30க்கு கால் பண்றேண்டி என்று.
இரவு 10 மணி.பெங்களுர்ல இருக்கும் என் கல்லூரி நண்பர்கள் வீட்டுக்குப் போனேன். ஒவ்வொருத்தரும் அதிர்ச்சியாக பார்த்தார்கள் என்னடா திடீர்னு... சொல்லாம வந்திருக்க. உங்கள எல்லாம் பாக்கணும்னு தோனுச்சு அதான் வந்துட்டேன் என்றேன். 'டேய், இந்த டகால்டி வேலை எல்லாம் வேணாம், நீ யாரைப் பாக்க வந்திருப்பன்னு தெரியும்' என்றான் பிரேம் கிண்டலாக. என் அறிவுக் கொழுந்துடா நீ. சரி, நான் குளிச்சிட்டு கிளம்பனும் 12 மணிக்குள்ள, நாளைக்கு பேசுறேன்டா என்று சொல்லிவிட்டு புறப்பட்டுக் கொண்டு இருந்தேன்.
11.45 மணிக்கு அவள் தங்கி இருந்த வீட்டை அடைந்தேன். அவளுக்கு கால் பண்ணினேன். 'என்னை விட உனக்கு கிரிக்கெட் அவ்வளவு முக்கியமா போயிடுச்சில்ல. நாளைக்குத் தான் stadium போறல்ல அப்புறம் இன்னைக்கும் டிவில பாக்கணுமா. அதுவும் சென்னை மட்டும் தான நீ support பண்ற' endraal. நானோ, IPL T20 ரொம்ப சூப்பரா இருக்கும் அதான்டி என்றேன். இன்னைக்கு மேட்ச் செம சூப்பர்டி பெங்களுர்க்கும் மும்பைக்கும். நல்லா ஆடி மும்பை ஜெயிச்சுட்டாங்க என்றேன். superb மேட்ச் தெரியுமா என்றேன்.
அவ்வளவு தான் அதைப் பிடித்துக் கொண்டாள். 'இன்னைக்கு ஜெயிச்சது பெங்களூர். உனக்கு IPL ரொம்ப பிடிக்குதுன்னு நானும் பாத்தேன் இன்னைக்கு. என்கிட்ட பொய் சொல்றடா இப்ப எல்லாம். என்னை ஏமாத்துறியா' என்றாள் அழுகுரலுடன்.
மணி 11.55 ஆகி இருந்தது. சாரிடி உன்னை ஏமாத்திட்டேன். உங்கிட்ட பொய் சொல்லிட்டேன் இன்னைக்கு என்றேன். அழ ஆரம்பித்து விட்டாள். இங்க பாரு லூசு அழாதடி ப்ளீஸ். ரூம்ல உன் பிரெண்ட்ஸ் இருக்காங்க. தப்பா எடுத்துக்குவாங்க வெளிய வந்து அழு. நான் என்ன நடந்துச்சுன்னு சொல்றேன் என்றேன்.
அழுது கொண்டே வெளியே வந்தவள் அங்கே நான் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மானைப் போல துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டாள். 'நீ எப்படிடா இங்க? காலைல இருந்து என்னை நல்லா ஏமாத்தி இருக்கல்ல' என்றாள்.
மணி சரியாக 12. "Happy birthday லூசு, wish you all the happiness in the Universe" என்று வாழ்த்தி விட்டு அவளுக்குப் பிடித்த லாவண்டர் கலர் சாரி, டெடி, ரோஸ், சாக்கலேட்ஸ், கேக் எல்லாவற்றையும் பரிசளித்தேன். அவள் முகத்தில் ஒரே ஆனந்தம். அப்ப அழும் போது தான்டி நீ நல்லா இருந்த என்றேன் நக்கலாக. 'போடா லூசு. என் பிறந்தநாள நீ மறந்திட்ட. என்னை இன்னைக்கு முழுதும் அழ வைக்கப் போறன்னு நினைச்சேன். ஆனால் இந்த மாதிரி எந்த பிறந்தநாள்லயும் நான் சந்தோசமா இருந்ததே இல்லடா. அவ்ளோ சந்தோசமா இருக்கேன் உன்னால' என்றாள். உன் சந்தோசத்துக்காக என்னனாலும் பண்ணுவேன்டி என்றேன்.
அப்படியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். மணி 1. அவளை விட்டுப் பிரிய மனமே இல்லை. சரிடி நான் கிளம்புறேன், நாளைக்கு பாக்கலாம் என்றேன். அவளுக்கும் என்னை விட்டுப் போக இஷ்டமே இல்லை. ஹ்ம்ம் என்றாள். நாளைக்கு எப்ப உன்னைப் பாக்க வரனுமோ அதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால எழுப்பி விடு என்றேன். சரிடா 5 மணிக்கு எழுப்பி விடுறேன் 6 மணிக்கு இங்க இருக்கணும் என்றாள். உன் கூட இந்த நாள் முழுவதும் இருக்கனும்டா என்றாள். சரிடி லூசு ஆறு மணிக்கு முன்னால இங்க நிப்பேன் என்றேன்.
'அப்புறம் இந்த பிறந்தநாள நீ மறந்துட்டு பெங்களூர் வராம மட்டும் இருந்திருந்தா நம்ம கல்யாணத்துக்குப் பிறகு எல்லா பிறந்தநாளுக்கும் எங்க அம்மா வீட்டில கொண்டாடுறது முடிவு பண்ணி இருந்தேன். நீ பொழச்சுகிட்ட' என்றாள். உன் அம்மா அப்பா தான்டி தப்பிச்சிட்டாங்க என்றேன் கிண்டலாக.
சரிடி நான் முக்கியமா IPL மேட்ச் முக்கியமான்னு கேட்டியே.. உன்னைத் தவிர வேற எதுவுமே இந்த உலகத்துல முக்கியம் இல்லடி செல்லம் என்று சொல்ல வெட்கத்தால் அவள் முகம் சிவக்க ஆரம்பித்து இருந்தது. நான் இதுக்கு தான்டி அப்ப பதில் சொல்லல நீ வெட்கப்படுறதை நேர்ல பாக்கணும்ல என்றேன். இந்த பொண்ணுக்குள்ளேயும் வெட்கம் ஒளிஞ்சிட்டு இருந்திருக்கு பாரேன் என்று சொல்ல 'போடா லூசு' என்று சொல்லிவிட்டு அவள் வீட்டுக்குள் ஓடிவிட்டாள். அவள் வெட்கப்படும் அழகைப் பார்த்த நான் அந்த இடத்துலேயே காலி... :-)
அவ மனசார சந்தோஷப் படுறதுக்காக என்னனாலும் பண்ணலாம் சார்... விண்ணைத் தாண்டி வருவாயா ஸ்டைல்ல சொல்லனும்னா 'உயிரைக் கொடுக்கலாம் சார்':-)
0 comments:
Post a Comment