Pages

Monday, August 23, 2010

BTM Cricket Ground

நன்றாக உறங்கிக் கொண்டிருந்தேன். மொபைல் காட்டுக் கூச்சல் போட்டதில் தூக்கம் கலைந்தேன். காலை 5.34 மணி. எதுவும் பேசமால் போனை காதில் மட்டும் வைத்தேன்.

"டேய் நாயே எழுந்திருடா" இது விக்னேஷ்.

'ஹ்ம்ம் ஹ்ம்ம்'

"டேய் 6.30க்கு groundல இருக்கணும்டா. இப்ப எழுந்தா தான் சரியா இருக்கும் நீ கிளம்பி வர"

'ஒரு பத்து நிமிஷம் கழிச்சு எழுப்பி விடுடா. ரொம்ப உறக்கம் வருது'

"டேய் பன்னி, கடுப்பேத்தாத டா. கெட்ட வார்த்தைல திட்டிடப் போறேன். எழுந்திரு டா"

'நான் வரலை மச்சி. நீங்க விளையாடுங்க இன்னைக்கு'

"#%@$^%$@^%& !^%&&^%W^&%$@ %^&%&@&^%@*&@^ %@&%@*&@*&^@*@*^@*" கெட்ட வார்த்தை மழை பொழிந்தது.

'இந்த மாதிரி கெட்ட பசங்களோட சேரக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லிருக்காங்க டா. எங்க அம்மா பேச்சை இனிமேல கேட்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்'

"டேய் இது உனக்கே ஓவரா இல்ல. ஹே தமிழ், இசைஅருவில உனக்கு பிடிச்ச பாட்டு ஓடுது டா - உன் பேரை சொல்லும் போதே" பாடிக் காண்பித்தான்.

'டேய் உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன், பாடி அந்த பாட்டை கொலை பண்ணிடாத' சொல்லிக்கொண்டே எழுந்து டிவியை போட்டேன்.

'டேய் எரும, என்ன டா வேற பாட்டு ஓடுது??'

"ஹா ஹா ஹா. எப்படி உன்னை எழுப்பிவிட்டேன் பார்த்தியா? உன்னை எழுப்பி விடுற technique எனக்கு மட்டும் தான் டா தெரியும்.."

'சூப்பர் டா. ஆஸ்கார்ல உனக்கு ஒரு அவார்ட் கொடுக்க சொல்லிடலாம்.'

"ஹா ஹா ஹா. சரி டா கரெக்ட் டைம்க்கு வந்திடு"

'டேய் இசைஅருவில போடலேன்னா என்ன இப்ப சன்ல அந்தப் பாட்டு ஓடுதே. ஹா ஹா ஹா'

"போட்டுட்டாங்களா!! டேய் கிளம்பு டா. groundல பாப்போம்" என்று சொல்லி கட் செய்தான்.

எனக்கு பிடித்த பாடலை எழுந்தவுடன் முதலில் பார்த்ததில் மனதுக்குள் அப்படி ஒரு சந்தோஷம். இந்த நாள் எனக்கு பிடித்த மாதிரி அமையப் போகிறது போன்ற ஒரு உணர்வு. இன்னைக்கு மேட்ச்ல கண்டிப்பா நாங்க ஜெயிக்கப் போறோம் நானும் நல்லா விளையாடுவேன் என்ற நம்பிக்கை வந்தது.

பனி விழும் அழகான காலைப் பொழுதில் பெங்களூரு சாலைகளில் பைக்கை செலுத்தினேன். சரியான நேரத்துக்கு ground வந்து சேர்ந்தேன். யாரையும் காணவில்லை. பதினைந்து நிமிடங்கள் பொறுமையாக இருந்தேன். விக்னேஷ்க்கு கால் பண்ணினால் "வந்துட்டு இருக்கோம் மச்சி. பத்து நிமிஷத்துல இருப்போம்" என்றான். ஆனால் "டேய் அவசரம்டா, சீக்கிரம் வெளிய வா" என்று அருள் கத்தியது என் காதில் விழுந்தது.

முன்பெல்லாம் விளையாட வரும் போது மொபைலை எடுத்து வரமாட்டேன். இப்பொழுது கொஞ்ச நாட்களாக தான் எடுத்து வர ஆரம்பித்திருக்கிறேன். மொபைல் இருந்தது காலை நேர தனிமையை ரசிக்க எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. மொபைலில் பாட்டு கேட்டுக் கொண்டே என் நண்பர்கள் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தேன்.

அனைவரும் வந்து சேரும் போது மணி 7.30.

'வர்ற நேரமா டா இது?' 6.30 ன்னு சொல்லிட்டு 7.30 க்கு எல்லாரும் வர்றீங்க?'

"டேய் நம்ம நாட்டுல பொறந்துட்டு இப்படி கரெக்ட் டைம்க்கு வந்தா எப்படி? 5 மணிக்கு function என்று சொன்னா 6 மணிக்கு மேல தான ஆரம்பிப்பாங்க. இந்த விஷயம் கூட உனக்கு தெரியாதா?" என்று கிண்டல் அடித்தான் எங்க டீமின் பெஸ்ட் பவுலர் அருள்.

'டேய் இனிமேல் இப்படி தான் லேட்டா வருவீங்கன்னா என்னைய எழுப்பி விடாதீங்க. நான் விளையாடவே வரமாட்டேன். ஒரு commitment இருக்கணும் டா விளையாட்டுல. எனக்கு அவ்வளவு கோபம் வருது..' என்றேன். நான் பேசும் போது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முடிந்தவுடன் சிரிக்க ஆரம்பித்தனர். "டேய் இப்ப நீ கோபமா பேசினியா? செம காமெடியா இருந்துச்சு டா" என்றான் கவின். 'நாம சீரியஸா தானே பேசினோம் காமெடின்னு சொல்றான்' என்று எனக்குள் நொந்து கொண்டேன். இவனுங்க எப்பவும் சீக்கிரம் வரப் போறது இல்ல நானும் என்னைக்கும் கிரிக்கெட் விளையாடுறத நிறுத்தப் போறது இல்ல என்பது மட்டும் எனக்கு தெரியும்.

மணி இப்பொழுது 8. இன்னும் நாங்கள் stumps கூட நடவில்லை. கதை அடித்துக் கொண்டிருக்க ஒருத்தன் வந்து "do u guys want to play a match against us?" என்று கேட்டு இவனும் software engineer தான் என்று நிரூபித்தான். பிள்ளைப் பூச்சி சிக்கிடுச்சு என்று அவர்களுடன் மேட்ச் ஆட ஆரம்பித்தோம். நங்கள் பேட்டிங். 15 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்தோம் 4 விக்கெட் இழப்பிற்கு. நான் 4 பௌண்டரிகளுடன் 34 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தேன். அதிகமாக அபி 60 ரன்கள் எடுத்தான். நாங்கள் பவுலிங் போட ஆரம்பித்தோம். நவீனனும் அருளும் அந்த பிள்ளைப் பூச்சிகளை நசுக்கிக் கொண்டிருந்தார்கள். வருசத்துக்கு ஒரு விக்கெட் எடுக்கும் விக்னேஷ் இன்று 3 விக்கெட்டுகள் எடுத்த போது தான் தெரிந்தது இவனுங்க கூட ஆடி நேரத்தை வீணாக்கியது.

7 ஓவர்களில் இன்னும் 120 ரன்கள் அடிக்க வேண்டி இருந்தது. பந்தை பிடிக்க முயற்சிக்கும் போது தடுமாறி 'ஆ...' என்று கத்திக் கொண்டே கீழே சரிந்தேன். "என்ன டா ஆச்சு?" என்றான் ராஜா. 'கால் சுளுக்கிடுச்சுடா சுத்தமா ஓட முடியல' என்றேன். "சரி டா நீ போய் உட்காரு நாங்க பாத்துக்கிறோம்" என்றான். அவர்கள் விளையாட்டை தொடர்ந்தார்கள். நான் பௌண்டரிக்கு வெளியே சென்று உட்கார்ந்தேன். தென்றலுக்கு கால் செய்தேன். இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நான் ஏன் கொஞ்ச நாளா மொபைல் எடுத்திட்டு வர ஆரம்பிச்சேன் என்று.

'என்ன டி அதுக்குள்ள முழிச்சுட்ட?'

"ஒரு லூசு கிட்ட பேசணும்னு தோனுச்சு அதான். நீ எங்க groundல இருக்கியா?"

'ஆமாம் பா'

"விளையாடிட்டு இருக்கியா? நான் அப்புறம் கால் பண்ணவா?? விளையாட தான groundக்கு வருவாங்க. பாரு லூசு மாதிரி கேள்வி கேட்கிறேன்" தென்றலின் குரலில் ஒரு சோகம் தெரிந்தது.

'இல்லடி. நான் விளையாடல. கால் சுளுக்கிடுச்சு'

"என்ன பா சொல்ற? பார்த்து விளையாட மாட்டியா?? டாக்டர் கிட்ட போலாம். நடக்க முடியுதா??? ரொம்ப வலி இருக்கா???? நீ அங்கேயே இரு. நான் வர்றேன் hospital போகலாம். எதுக்கும் scan எடுத்து பாப்போம் பா"

'ஹே லூசு இருடி. என்ன முழுசா சொல்ல விடு. என்னோட போன் vibrate ஆச்சா அடுத்த நிமிஷம் கால் சுளுக்கிடுசுன்னு பொய் சொல்லிட்டேன். அதனால இப்ப வெளிய உட்கார்ந்து என் செல்லத்தோட பேசிட்டு இருக்கேன்'

"அடப்பாவி. இரு இரு. ஷங்கர் அண்ணாட்ட போட்டு கொடுக்கிறேன்"

'சரிடி அப்ப கால் சரி ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு விளையாட போயிடவா?'

"வேணாம் பா. என்னோட பேசு. கிரிக்கெட்டா நான் முக்கியமான்னு கேட்க மாட்டேன். உனக்கு எது முக்கியம்னு எனக்கு தெரியுமே" அவள் குரலில் இப்போது சந்தோஷம்.

'உண்மையாவே லூசு தான்டி நீ!!'

"yes. ஒரு லூசு தான் என்னையும் இப்படி பைத்தியம் ஆக்கிடுச்சு. சரி அது எப்படி நான் தான் கால் பண்றேன்னு கண்டு பிடிச்ச?"

'அதெல்லாம் அப்படி தான். உன்னை நல்லா புரிஞ்சுகிட்டதுனால'

"அதான் எப்படின்னு சொல்லு?" சிணுங்கினாள்.

அவள் சிணுங்களில்
மிட்டாய் கேட்டு
அடம் பிடிக்கும்
இரண்டு வயது
மழலை கூட
தோற்றுப் போய்விடும்..

'நீ நினைக்கிறத நான் பேசுறது செய்றது தான்டி காதல்'

"டேய் இது நேத்து fmல சொன்னது. copy cat"

'யாரு சொன்னா என்ன? நல்லா இருக்குல்ல'

"ஹ்ம்ம். சரி இப்ப நான் என்ன மனசுல நினைக்கிறேன்னு சொல்லு"

'இந்த weekend டிவி பார்க்காம friends கூட வெளிய சுத்தாம எதிர்த்த வீட்டு பொண்ண சைட் அடிக்காம நல்ல பிள்ளையா வீட்ல உட்கார்ந்து certification க்கு படிக்கணும்'

"ஹே எப்படி டா?. சரி அடுத்து சொல்லு"

'தீபாவளிக்கு ஊருக்குப் போறதுக்கு நம்ம ரெண்டு பேருக்கும் நீ டிக்கெட் எடுத்துட்ட'

"என்னால நம்பவே முடியலைடா. அடுத்து?"

'அடுத்து என்ன. இன்னைக்கு 11 மணிக்கு நாம ரெண்டு பேரும் மீட் பண்றோம். lunchக்கு அஞ்சப்பர் போறோம். அதனால உன்னை பிக் அப் பண்ண நான் உன் ஹாஸ்டல் வரணும்'

"இது தப்பு டா. கார்த்திகா கூட நான் இப்ப வெளிய போறேன். நீ என்னை கொஞ்சம் கம்மியா தான் காதலிக்கிறியா?"

'விளையாடாத லூசு. நீ பொய் சொல்றன்னு எனக்கு தெரியும்'


"இல்லடா"

'நான் நம்ப மாட்டேன்.' எப்படி பேச்சை மாத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் 'ஹே இங்க ஒருத்தர் ரோஸ் வித்துட்டு போறாருடி. ரொம்ப அழகா இருக்கு. yellow, white, red ன்னு நிறையா கலர்ஸ் இருக்கு' என்றேன்.

"அப்ப எல்லா கலர்லயும் ஒன்னு வாங்கிட்டு என்னோட ஹாஸ்டலுக்கு கரெக்டா 11 மணிக்கு வந்திடுற. நாம அஞ்சப்பர் போறோம்"

'அப்ப கார்த்திகா கூட வெளிய போல நீ?'

"சும்மா சொன்னேன் டா உன்னை சீண்டிப் பார்க்க"

'அதான பார்த்தேன். ஒரு நிமிஷத்துல பதறி போய்டேன் உன்னை நான் கொஞ்சம் கம்மியா தான் லவ் பண்றேனோன்னு'

கார்த்திகா கூட ஷாப்பிங் போறதை எனக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சொல்லி இருந்தாள். நான் தான் மறந்து தப்பா சொல்லி விட்டேன். இருந்தும் ஒரு சின்ன விசயத்தில் கூட நான் என் காதலில் தோற்று விடக் கூடாது என்று அவள் கார்த்திகாவை கழட்டி விட்டது எனக்கு மட்டும் தான் தெரியும்.

"இல்லவே இல்ல டா செல்லம். உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன் சீக்கிரம் வந்திடு டா. மறக்காம ரோஸ் வாங்கிட்டு வந்திடு. வாங்கலைன்னா வராத' என்று சொல்லி கட் செய்தாள்.

'ரோஸ் ரோஸ்' என்று கூப்பிட்டு பார்த்தேன். அவ்வழியே வந்த பொண்ணு முறைத்துக் கொண்டே சென்றாள். கன்னடம் தெரியாததால் அவரை எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. groundல் இருந்து ஓட ஆரம்பிதேன் அவரை நோக்கி...

திடீர் என்று ஒரு பத்து பேர் என்னை சுற்றி வளைத்தனர். அவர்கள் கையில் இருந்த கிரிக்கெட் பேட், stumpகளால் தாக்க ஆரம்பித்தனர். 'என்னை இப்ப விட்டுடுங்க அவசரமா போயிட்டு இருக்கேன்' என்று அவர்களிடம் கெஞ்சிப் பார்த்தேன். எடுபடவில்லை. என்னை கும்ம ஆரம்பித்தனர். "டேய் வேற யாரும் commitment பத்தி பேசிருந்தா கூட நான் ஒன்னும் நினைச்சு இருக்க மாட்டேன். இவன் பேசிட்டான் டா" என்று அருள் சொல்வது மட்டுமே என் காதில் விழுந்தது. "விளையாட்டு மைதானத்தை பத்து முறை சுற்றி விட்டுத் தான் நீ வீட்டுக்கு வர வேண்டும்" என்று நாட்டாமை விஜய் தீர்ப்பு வழங்க ஓட ஆரம்பித்தேன்..

உங்க மனசுல இருக்கிற கேள்வி புரியுது. கண்டிப்பா பதில் சொல்லாம போயிட மாட்டேன். மணி இப்ப 10.45. என் தேவதையை தரிசிக்க இதோ ரோஜா பூக்களுடன் சென்று கொண்டிருக்கிறேன். என் தென்றல் ஆசைப்பட்டு கேட்டதை வாங்கித் தராம இருப்பேனா என்ன!! :-)

2 comments:

Unknown said...

very nice :)

Priya said...

அவள் சிணுங்களில்
மிட்டாய் கேட்டு
அடம் பிடிக்கும்
இரண்டு வயது
மழலை கூட
தோற்றுப் போய்விடும்..

cute lines...

Post a Comment