Pages

Wednesday, October 09, 2013

கனவுகளைக் காதலிக்கிறேன் - 2

“நானும் சேர்ந்துக்கலாமா உங்க விளையாட்டுல?” என்றேன் நிலாவிடம்.

‘கண்டிப்பாக சூர்யா’ என்றவள் அவளது நண்பர்களையும் கூப்பிட்டாள். ‘இவன் கார்த்திக், இவன் அசோக்’ என்று அறிமுகம் செய்தாள். அவர்கள் இருவருக்கும் என்னைப் பிடிக்கவில்லை. என்‌னைப் பிடிக்கவில்லை என்பதை விட நான் நிலாவிடம் பேசுவது மட்டும் பிடிக்கவில்லை என்பதே சரியாக இருக்கும். நிலாவிற்காக என்னையும் சேர்த்துக் கொண்டார்கள் இருவரும். நாங்கள் நால்வரும் ஒளிந்து பிடித்து விளையாடினோம். மூன்று பேர் மட்டுமே விளையாடக்  கூடிய விளையாட்டு ஏதாவது இருக்கின்றதா என்று அவர்கள் இருவரும் ஆராய ஆரம்பித்தார்கள் என்னை எப்படியாவது கழட்டி விட வேண்டும் என்று.

வருடங்கள் சென்றதே தெரியவில்லை. நாங்கள் இப்பொழுது 8 ஆம் வகுப்பில் இருக்கிறோம்.

ஒரு நாள், “ஏன் நிலா உனக்கு பொண்ணுங்க பிரண்ட்ஸ் யாரும் இல்லையாயா?” என்று கேட்டேன்.

‘எனக்கு பொண்ணுங்களோட ஒத்துப் போக மாட்டேங்கிது டா’ என்றாள்.

“நீயும் என்னை மாதிரி தானா?”

‘ஏன்? என்னைத் தவிர வேற எதாச்சும் பொண்ணுங்க பிரண்ட்ஸ் இருக்கா உனக்கு’ – சிறு கோபம் தெரிந்தது அவளிடம்.

“வித்யா”

‘அவளைப் பத்தி நீ ஏதுமே எங்கிட்ட சொன்னது இல்லை இதுவரை?’

“நீ கேட்கல நானும் சொல்லல”

‘சரி இப்ப கேட்கிறேன். உன் வித்யா பத்தி சொல்லு?’

“எப்படி சொல்றது. புள்ளைன்னா அவ தான் நடந்து வர்றால மிதந்து வர்றாலான்னே தெரியாது…”

என்‌னை நிறுத்தியவள் ‘அடங்குடா இதை எல்லாம் நான்  சண்டைக்கோழி படத்திலேயே பார்த்துட்டோம். வேற எதாச்சும் சொல்லு’ என்றாள்.

“அவளைப் பத்தி நான் என்ன சொல்ல. அவளை ஒரு நாள் கூட்டிட்டு வர்றேன் அப்ப நீயே பார்த்துக்கோ”

‘எனக்கு அவளைப் பார்க்க இஷ்டம் இல்லை’

“ஹ்ம்ம் அவ ஃபோடோ இருந்த எடுத்திட்டு வர்றேன். அம்மாகிட்ட கேட்டுப் பார்க்கிறேன்”

ஒரு ____ம் வேணாம் என்பது அவள் கண்களிலேயே தெரிந்தது.

‘என்னை விட உனக்கு ரொம்ப க்ளோஸா?’

“என்ன சொல்ல!!!! அவகிட்ட பேசியே 6 வருஷம் மேல ஆயிடுச்சு. அவளைப் பார்த்தும் தான். உனக்கு ஒன்னு தெரியுமா அவளுக்கும் உன்னை மாதிரி அழகான கூந்தல் தான். எனக்கு உன்னை பார்க்கும் போதெல்லாம் அவ ஞாபகம் தான் வரும். உங்க ரெண்டு பேரிடமும் எனக்கு ரொம்ப பிடிச்சது Long hair தான்”

‘என்னைப் பார்க்கும் போது உனக்கு ஒன்னும் அவ ஞாபகம் வரத் தேவை இல்லை. நான் என் முடியை ஷார்ட்டா கட் பண்ணப் போறேன்’

“அப்படி எல்லாம் பண்ணிடாத. உனக்கு அழகே உன் முடி தான்”

‘நான் எதுக்கு வெட்டணும். நான் முடியை நீளமா வளர்க்கிறது அஷோக், கார்த்திக்காக தான். ரெண்டு பெரும் பயங்கர பைத்தியம் என் ஹேர் மேல. என் ஜடையை இழுத்து விளையாடலைன்னா அவங்க ரெண்டு பேருக்கும் உறக்கமே வராது. அவங்க தூக்கத்தை நான் கெடுக்க விரும்பலை’ என்னைக் கடுப்பேற்ற ஆரம்பித்த்தாள்.

“நானும் இப்படி தான் வித்யா ஜடையை இழுத்து விளையாடுவேன்” பதிலுக்கு வெறுப்பேற்றினேன்.

‘ஹ்ம்ம். என்னோட முடியை விட அவளுக்கு நீளமா?’ - சற்று சோகமானாள்.

“ஒரே அளவுன்னு தான் நினைக்கிறேன்” தப்பிக்க முயற்சித்தேன்.

‘அது எப்படி இருக்க முடியும்? கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கும்ல’

“தெரியல நிலா. நேர்ல எப்பவாது ரெண்டு பேரையும் சேர்த்து பார்த்தா சொல்றேன்” என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனேன்.

ஒன்பதாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தோம். எங்கள் கிளாஸ் டீச்சர் ஹென்றி சார் புதிதாக சேர்ந்தவர்களை ஒவ்வொருவராய் அறிமுகம் செய்து கொண்டிருந்தார். அவர் பேரை சொன்னதும் ஒவ்வொருவராய் மேடையில் தங்களை அறிமுகம் செய்து கொண்டு செல்வார்கள்.

அப்பொழுது அவர் ‘வித்யா’ என்று அழைக்க நான் சிறிது ஆவலானேன். என்னைவிட இந்த வித்யா யார் என்று மிக எதிர்பார்த்தது நிலா தான். வித்யா வந்ததும் என் முகம் பிரகாசமாய் மாறியது. நான்  விட்ட ஜொள்ளிலேயே புரிந்திருக்கும் நிலாவிற்கு இந்த வித்யா தான் அவள் என்று. இருந்தாலும் ‘உன் க்ளோஸ் பிரண்ட் வித்யா?’ என்று என்னிடம் கேட்டு உறுதி செய்து கொண்டாள்.

வித்யா தன்னை அறிமுகம் செய்து விட்டு திரும்ப நடந்து சென்று கொண்டிருந்தாள். நிலா, வித்யாவின் கூந்தலை கவனிக்க ஆரம்பித்தததை நான் பார்க்கத் தவறவில்லை….
 

உறங்கச் செல்கிறேன்….

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசனையுடன் செல்கிறது... தொடர வாழ்த்துக்கள்...

Unknown said...

சூப்பர். அடுத்த பார்ட் எப்போ?

Post a Comment